கொரோனாவின் பிடியில் விமான நிறுவனங்கள்.. பிரச்சனையில் இருந்து தப்பிக்க $2.5 பில்லியன் வேண்டும்..!

டெல்லி: உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கித் தவித்து வரும் நிலையில், அதன் பங்குக்கு இந்தியாவினையும் ஆட்டிப்படைத்து வருகிறது. ஒரு புறம் மக்களை பாடாய் படுத்தி வரும் கொரோனா, பொருளாதாரத்தினையும் விட்டு வைக்கவில்லை.

மறுபுறம் உலகம் முழுக்க லாக்டவுனால் முடங்கியுள்ள நிலையில், முற்றிலும் விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து என சில அத்தியாவசியம் தவிர, அனைத்தும் முடங்கியுள்ளன.

இதனால் உலகம் முழுக்க விமான சேவையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

விமான நிறுவனங்கள் தப்பிக்க நிதி

விமான நிறுவனங்கள் தப்பிக்க நிதி

இதனால் கடந்த சில மாதங்களாகவே விமான நிறுவனங்கள் முடங்கி கிடைக்கின்றன. இந்த நிலையில் இருந்து விமான நிறுவனங்கள் தப்பிக்க 2.5 பில்லியன் டாலர் வரை திரட்ட வேண்டியிருக்கும் காபா இந்தியா தெரிவித்துள்ளது. அதிலும் இன்னும் லாக்டவுன் நீண்டகாலம் நீடிக்கும் போது இன்னும் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.

இண்டிகோவுக்கு பிரச்சனை இல்லை

இண்டிகோவுக்கு பிரச்சனை இல்லை

இதில் மற்ற கேரியர்களுடன் ஒப்பிடும்போது இண்டிகோவுக்கு அவ்வளவு பிரச்சனை இல்லை என்றாலும், மற்ற கேரியர்களுடன் ஒப்பிடும்போது இண்டிகோவிடம் பணம் இருப்பு உள்ளது. எனினும் நீண்டகாலத்திற்கு இந்த பிரச்சனை தலைதூக்கும் நிலையில், அதுவும் பிரச்சனையை சந்திக்கலாம் என்றும் காபா இந்தியா தனது அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல்வேறு பிரச்சனை

பல்வேறு பிரச்சனை

உலகம் முழுக்க பரவி வரும் கொரோனாவால் இந்தியா விமான துறையானது பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான் விமான ஆலோசனை நிறுவனமான காபா இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது முற்றிலும் விமான சேவை முடங்கியுள்ள நிலையில், அவை 2.5 பில்லியன் டாலர் வரை திரட்ட வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

கூடுதல் நிதி தேவைப்படலாம்

கூடுதல் நிதி தேவைப்படலாம்

கொரோனா தொற்று நோயின் காரணமாக தரையில் முடங்கியுள்ள இந்த நிறுவனம், சந்தை திரும்ப தொடங்கும் வரை அவர்கள் உயிர்வாழ போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் மீட்புக்கு கூடுதல் நிதி தேவைப்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறியுள்ளது. இந்த முடக்கம் கொரோனாவிற்கு ஏதேனும் தடுப்பூசியோ அல்லது குணப்படுத்தும் ஏதேனும் மருந்துகளை பொறுத்தே அமையும்.

கடுமையான சவால் தான்

கடுமையான சவால் தான்

மேலும் கொரோனாவில் இருந்து மீட்டு அவ்வளவு எளிதானது அல்ல. தொழில் மற்றும் அரசாங்கத்தால் முக்கியமான மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் காபா இந்தியா அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆக சேவைகள் மீண்டும் தொடங்குவதோடு, அதனுடன் தொடர்புடைய நிதி மற்றும் செயல்பாட்டு சவால்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+