டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 ஆம் நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான பணிகளில் தீவிரமாக இருக்கிறார். நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதையொட்டி கடந்த பிப்ரவரி மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டையே தாக்கல் செய்தார்.
தேர்தல் முடிந்து தற்போது மீண்டும் பாரதிய ஜனதா தலைமையிலான ஆட்சியே மத்தியில் அமைந்துள்ளது .இதனை அடுத்து கூடிய விரைவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-25 நிதி ஆண்டுக்கான முழு நீள பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார்.

இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை என்னென்ன அறிவிப்புகள் வெளியாக கூடும் என்ற எதிர்பார்ப்பு எகிரி இருக்கிறது. குறிப்பாக கொரோனாவுக்கு பிந்தைய காலகட்டத்தில் இந்திய பொருளாதாரம் நிலையான வளர்ச்சியை எட்டியுள்ளது , பணவீக்கமும் தற்போது கட்டுப்பாட்டில் இருக்கிறது. எனவே இவற்றையெல்லாம் மனதில் கொண்டுதான் பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜூலை 23 அல்லது 24 ஆம் தேதிகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட கூடும் என சொல்லப்படுகிறது. பொதுவாகவே பட்ஜெட் அறிவிப்பு என வரும்போது பெரும்பாலும் ஊதியம் பெறக்கூடிய மக்களின் எதிர்பார்ப்பு என்பது வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படுமா என்பதுதான்.
அந்த வகையில் மாத சம்பளக்காரர்கள் பெறக்கூடிய பலரும் மத்திய அரசு வருமான வரி உச்ச வரம்பில் மாற்றத்தை கொண்டு வருமா? என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏற்கனவே மத்திய அரசு பழைய வரிமுறை மற்றும் புதிய வரிமுறை என இரண்டு வரிமுறைகளை தற்போது செயல்படுத்தி வருகிறது.
மக்கள் புதிய வரிமுறைக்கு மாற வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. எனவே அதனை ஊக்குவிக்கும் வகையில் புதிய வரிமுறையில் புதிதாக வருமான வரி அடுக்குகள் அறிவிக்கப்படலாம் என்றும் குறிப்பிட்ட அளவிலான சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக ஐந்து லட்சத்திற்குள் ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு இந்த பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாக கூடும் என தெரிகிறது.
அடுத்ததாக சாமானிய மக்கள் மீதான வருமான வரி சுமையை குறைக்க வேண்டும் என்றும் மூலதன செலவினத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் தொழில் அமைப்புகள் மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தில் கூட பல்வேறு தொழில் அமைப்புகளும் வருமான வரி அடுக்கில் மாற்றம் கொண்டு வரவேண்டும், உணவு பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
இந்த பட்ஜெட்டில் எட்டாவது ஊதிய குழுவை அமைக்கும் அறிவிப்பு வெளியாகுமா என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும், வருமான வரி அடுக்கு முறையில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும், வருமான வரி தள்ளுபடியை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசு ஊழியர்கள் முன்வைத்துள்ளனர்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மையம் ஒப்படைப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய அரசு பணிகளை வெளி நிறுவனங்களுக்கு ஒப்பந்தத்திற்கு விடும் நடைமுறையை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
ஏற்கனவே 12 தொழிலாளர் யூனியங்களை சேர்ந்தவர்கள் மத்திய அரசின் நிதித்துறை அமைச்சக அதிகாரிகளை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். குறிப்பாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் நாட்களை ஆண்டுக்கு 200 நாட்களாக அதிகரிக்க வேண்டும் என கேட்டுள்ளனர்.
Story written by: Devika
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications