நாட்டில் ஓமிக்ரான் தாக்கம் என்பது தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மறுபுறம் மத்திய பட்ஜெட்டிற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த பட்ஜெட்டில் வளர்ந்து வரும் சில முக்கிய துறைகளில் அரசு கவனம் செலுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக இன்றைய காலகட்டத்தில் நாட்டின் மிக அவசியமான தேவைகளில் ஒன்றாக இருக்கும், கார்பன் உமிழ்வை குறைக்க பல்வேறு திட்டங்களை தொடங்கலாம், அதற்கு பல சலுகைகளையும் கொடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல்
நிலக்கரியை எரிக்காமல், புகையை வெளியிடாமல், சாம்பலை குவித்து வைக்காமல் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதே பசுமை ஆற்றலாகும். இதற்கு முக்கிய வழி சோலார் பேனல்கள், காற்றாலைகள், நீர் போன்ற இயற்கை வாயிலாக பெறும் ஆற்றல் புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் எனப்படுகின்றது. இதில் ஏற்கனவே இந்தியா முதல் படியை எடுத்து வைத்து விட்ட நிலையில், அடுத்தடுத்த இடங்களை பிடிக்க தீவிர முயற்சியும் எடுத்து வருகின்றது.
இலக்கு எப்போது அடையும்?
அண்டை நாடுகள் இந்தியா தனது நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கினை அடைய என்ன திட்டம் வைத்திருக்கிறது என கேள்விக் கணைகளை தொடுத்து வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் 450 ஜிகாவாட் புதுபிக்கத்தக்க ஆற்றல் இலக்கினை அடைய என்ன செய்யப் போகிறது. மற்ற நாடுகள் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்தியா அப்படி ஏதும் நிர்ணயிக்கவில்லை.இந்த நிலையில் புதுபிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மின்சார வாகனங்களை ஊக்குவிக்கலாம்
குறிப்பாக புதுபிக்கத்தக்க எரிசக்தி துறைக்கு முக்கிய தேவையாக இருப்பது உள்கட்டமைப்பு வசதிகளே. மேலும் மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள், க்ரீன் ஹைட்ரஜன் உள்ளிட்டவற்றிலும் அரசு கவனம் செலுத்தலாம். குறிப்பாக மின்சார வாகனங்களை ஊக்குவிக்க அரசு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம். குறிப்பாக வாகன ஸ்கிராப்பேஜ் திட்டத்தினை ஊக்குவிக்கலாம்.
மூலதனங்களுக்கு வரிச் சலுகை
ஏனெனில் இன்றைய காலகட்டத்தில் கார்பன் வாயு பயன்பாட்டை குறைக்க மிகப்பெரிய யுக்தியாக இருப்பது மின்சார வாகனங்கள் தான்.
இதற்கிடையில் சோலார் பேனல்கள் இறக்குமதி உள்ளிட்ட பல அம்சங்களுக்கு வரி சலுகை அளிக்கப்படலாம். அதோடு இந்த புதுபிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்காக செய்யப்படும் மூலதனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications