வாஷிங்டன்: அமெரிக்காவில் இன்று (நவம்பர் 04) அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி தொடர்பான அறிக்கை வெளியாகி உள்ளது. இதன் படி அக்டோபர் மாதத்தில் புதிதாக வேலை வாய்ப்புகளே உருவாகவில்லை என்ற அதிர்ச்சியான தகவல் வெளிவந்துள்ளது. அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்புக்கும் , கமலா ஹாரிசுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிவரும் சூழலில் அமெரிக்க வேலைவாய்ப்பு வளர்ச்சி தொடர்பான எதிர்மறையான அறிக்கை வெளியாகி உள்ளது.

ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக விமானங்கள் மற்றும் விமான பாகங்களை தயாரித்து வழங்கக்கூடிய நிறுவனங்களில் உற்பத்தி தடைபட்டு நிற்கிறது. பல்வேறு இடங்களில் புயலின் தாக்கம் காரணமாக உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வேலைவாய்ப்பு சந்தை எதிர்மறையான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வேளாண்மை ,வீட்டு வேலை மற்றும் லாப நோக்கமற்ற பணிகள் ஆகியவற்றைத் தவிர மற்ற வேலைகள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கடந்த மாதம் வெறும் 12,000 வேலை வாய்ப்புகள் மட்டுமே உருவாகி இருக்கிறதாம். இந்த தகவலை அமெரிக்க அரசின் தொழிலாளர் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ளது.
ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் 1,12,000 என்ற எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகள் மட்டுமே உருவாகியுள்ளன. எனவே இவையெல்லாம் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலையை நோக்கி செல்வதையே குறிக்கிறது என சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதே போல அக்டோபர் மாதத்தில் 2 லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர் என்ற ஒரு தகவலும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக டெக் நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்வது அதிகரித்துள்ளதாம்.
வேலை வாய்ப்பில் இருந்து மக்கள் தொகை விகிதம் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரம் மக்களுக்கு எந்த அளவிலான வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்பதை கணக்கிடுகிறது. இந்த விகிதம் அக்டோபரில் 60.2 சதவீதத்திலிருந்து 60 சதவீதம் என குறைந்துள்ளத.
சில நாட்களுக்கு முன்பு பல்ஸ் சர்வே என்ற தலைப்பில் ஒரு ஆய்வு அறிக்கை வெளியானது. அதில் அமெரிக்காவை சேர்ந்த 61 பெரு நிறுவன அதிகாரிகள் அமெரிக்க பொருளாதாரம் அடுத்த ஆறு மாதங்களுக்குள் மந்த நிலைக்கு செல்லும் என தெரிவித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் இந்த இதே சர்வே நடத்தப்பட்ட போது 41 சதவீதம் பேர் மட்டுமே அமெரிக்க பொருளாதாரம் அந்த நிலைக்கு செல்லும் என கூறியிருந்தார்கள், தற்போது அது 61% என உயர்ந்துள்ளது. எனவே தேர்தல் முடிவு எவ்வாறு அமைந்தாலும் நாட்டின் பொருளாதாரம் ஆட்டம் காண தொடங்கி இருக்கிறது என எச்சரிக்கின்றனர்.
Story Written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications