டெல்லி: 2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு பிரகாசமான காலம் என கூறலாம். அந்த அளவிற்கு பிட்காயின் விலை 100 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து ஒரு லட்சம் டாலரை கடந்து வர்த்தகமாகி வருகிறது.
சர்வதேச அளவில் பங்குச்சந்தைகள், பத்திரங்கள் மற்றும் தங்கத்தில் செய்த முதலீடுகளை விட பிட்காயினில் செய்த முதலீடு பெரிய லாபம் ஈட்டி தந்து இருப்பது தெரிய வந்துள்ளது. 2024 ஆம் ஆண்டினை பொருத்தவரை மிகச் சிறந்த முதலீட்டு கருவியாக பிட்காயின் மாறி இருக்கிறது.

இந்த 12 மாத காலத்தில் பிட்காயின் மதிப்பு 140 சதவீதம் உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிட்காயினின் மதிப்பு 42,000 டாலர்களாக மட்டுமே இருந்தது தற்போது அது 1,08,000 டாலர்களாக உயர்ந்திருக்கிறது.
இது இந்தியாவின் நிஃப்டி 50 குறியீடு 10 சதவீதமும், தங்கம் 20% மட்டுமே உயர்ந்திருக்கும் நிலையில் அதை விட பல மடங்கு பிட்காயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனைகள் வாரியம் முதன்முறையாக பிட்காயின் இடிஎஃப்க்கு அனுமதி வழங்கியது. எனவே இதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அது தவிர அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதும் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.
2024ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தான் பிட்காயினின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. ஏனெனில் டொனால்ட் டிரம்ப் இதற்கு முன்பு பிட்காயின் சம்பந்தப்பட்ட மாநாட்டில் பங்கேற்றார்.
எனவே பிட்காயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய திட்டங்களை அவர் அறிவிக்கலாம் என முதலீட்டாளர்கள் நம்புகின்றனர்.
அது தவிர கிரிப்டோ கரன்சிக்கு சாதகமாக செயல்படக்கூடிய பால் ஆட்கின்ஸை டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தில் உறுப்பினராக்கியுள்ளார்.
ரஷ்ய அதிபர் புதினும் அண்மையில் பிட்காயினுக்கு சாதகமாக பேசினார். பிட்காயினை தவிர ஆல்ட் காயின் மற்றும் பிற சிறிய கிரிப்டோ கரன்சிகளும் 2024 ஆம் ஆண்டில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளன. கொரோனாவுக்கு பின்னர் பிட்காயின் மதிப்பு சரிவடைந்த போது அது மீண்டும் வராது என பலரும் கூறினர். ஆனால் அதை எல்லாம் கடந்து தற்போது மிகப்பெரிய உச்சத்தை அடைந்துள்ளது பிட்காயின்களின் மதிப்பு.
2025 ஆம் ஆண்டினை பொறுத்த வரை பிட்காயின்களின் மதிப்பு தொடர்ந்து வளர்ச்சிப்பாதையில் தான் இருக்கும் என்கின்றனர் இந்த துறை சார்ந்த நிபுணர்கள். குறிப்பாக பிட்காயினின் மதிப்பு 2025ஆம் ஆண்டில் 2 லட்சம் டாலர்கள் வரை உயரலாம் என்றும் நிபுணர்கள் கணிப்பு வெளியிடுகின்றனர். வரும் புத்தாண்டு பிட்காயின் முதலீடு செய்தவர்களுக்கு சிறந்த காலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்காவுக்கு மூச்சு முட்ட வைக்கும் சீனாவின் 'அனகொண்டா' தந்திரம்.. 2026ல் அடுத்த போர் தைவான் நாட்டில் தானா?!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு



Click it and Unblock the Notifications