தீபாவளிக்குள் தங்கம் விலை 20000 ரூபாய் உயருமாம்.. வெளியானது முக்கிய கணிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தொடங்கிய போர் பிரச்சனை இன்னும் ஓய்ந்தபாடில்லை. உலகளவில் பொருளாதார நிச்சயமற்றத் தன்மை, புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் பணவீக்கம் அதிகரிக்கும் போது மக்களின் கவனம் தங்கத்தின் பக்கம் திரும்பும். இதனால் அந்த சமயத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கும். சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 4000 டாலரை எட்டியுள்ளது. உள்நாட்டு சந்தையிலும் 10 கிராம் தங்கம் ரூ.1.42 லட்சம் வரை விற்பனை ஆகிறது.

முதலீட்டாளர்களுக்கும், நகைப் பிரியர்களுக்கும் தங்கத்தை பற்றிய தனி இன்ட்ரோ கொடுக்க தேவையில்லை. நீண்ட காலமாகவே ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களின் விருப்பத்தேர்வு தங்கம் தான். ஆனால் சில காலமாக தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. ரூ.15,000-த்திற்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட 1 கிராம் 24 கேரட் தங்கம் திடீரென சரிவை சந்தித்து தற்போது 14,300 ரூபாயை எட்டியுள்ளது. 1 கிராம் 22 கேரட் தங்கம் 13,150 ரூபாயை எட்டியுள்ளது

இருந்தாலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைய வாய்ப்பில்லை என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். இனிவரும் நாட்களிலும் தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்தாலும் 5 சதவீதத்திற்கு அதிகமாக குறையாது என்றும் கணித்துள்ளனர்.

தீபாவளிக்குள் தங்கம் விலை 20000 ரூபாய் உயருமாம்.. வெளியானது முக்கிய கணிப்பு!

சமிபத்திய நாட்களில் ஏற்பட்ட தங்க விலை சரிவு முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸாக அமைந்தது. தற்போது வரை 10 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.1.31 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1.43 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதனால் மக்களும் விலை இன்னும் குறையும் என்று காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். நிபுணர்கள் தங்கம் வாங்குவதை தள்ளி போடாதீர்கள். இனி விலை குறைவதற்கு வாய்ப்புகள் குறைவு என்று அறிவுறுத்துகின்றனர். மேலும் தற்போதைய சரிவின் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

Also Read

ஏனெனில் தங்கம் விலை கிடு கிடுவென அதிகரித்த போது விற்பனை மந்த நிலையில் இருந்தது. ஆனால் தற்போதைய சரிவினால் மீண்டும் மெல்ல மெல்ல நகை விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் நெருங்கி விட்டால் பண்டிகை காலம் தொடங்கிவிடும். இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் மாதத்தில் வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தீபாவளிக்கும் அதற்கு இணையான விற்பனை நடக்கும் என்று நகை வியாபாரிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

தீபாவளிக்குள் தங்கம் விலை என்னவாகும்?: நியூஸ் 18 அறிக்கையின்படி புவிசார் அரசியல் பதற்றங்கள் சற்று குறைந்தால் உள்நாட்டில் தங்கத்தின் விலை 10 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.1.60 லட்சம் வரை உயரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது 10 கிராமுக்கு ரூ.20,000 அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஒரு வேளை அரசியல் பதற்றம் இன்னும் அதிகரித்தால் விலை ரூ.1.35 முதல் ரூ.1.45 என்ற வரம்பில் இருக்க வாய்ப்புள்ளதாக கணித்துள்ளனர். ஜூலை 14-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.50 குறைந்து ரூ.13,150-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ. 54 குறைந்து ரூ.14,346-க்கும் விற்பனையாகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+