தங்கம் விலை தொடர்ந்து உயரே சென்று கொண்டிருக்கும் அதே நேரத்தில், அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 73.44 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
மேலும் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால் இந்திய பங்குசந்தைகளில், சில்லறை முதலீட்டாளர்கள் பயத்தினால் முதலீடுகளை தவிர்த்து வருகின்றனர்.
ஆக கொரோனாவின் பயத்தின் காரணமாக இந்திய பங்கு சந்தை முதலீடுகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் இந்திய பங்கு சந்தைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றன.
முதலீடு செய்ய பயம்
மேலும் இழப்புகள் அதிகம் வர வாய்ப்புகள் உள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தைகள் முதலீடு செய்ய அதிகம் பயப்படுவதாகவும் அறிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. வல்லுனர்களின் கூற்றுப்படி அமெரிக்கா மற்றும் இந்தியா உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸினை கண்டறிந்த பின்னர், கோவிட் -19 மேலும் இந்திய ரூபாய் பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதிகபட்ச சரிவையும் எட்டலாம்
அதிலும் குறிப்பாக ரூபாயின் அதிகபட்ச சரிவான 74.47 ரூபாயினைக் கூட எட்டக்கூடும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். கோட்டக் செக்யூரிட்டீஸின் ஆய்வாளர் அனிந்தியா பானர்ஜி கூறுகையில், கொரோனா வைரஸினால் உலகளாவிய வர்த்தகம் முடங்கி வருகிறது. அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலிக்கிறது. அதிலும் தற்போது இந்தியாவிலும் க்பொவிட் தாக்கம் அதிகரித்து வருவதினால் ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி காணலாம் என்றும் கூறப்படுகிறது.
அன்னிய முதலீடுகள் குறையக் கூடும்
மேலும் இந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரிக்கும் எனில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியக்கூடும். மேலும் கொரோனா பயத்தால் இத்தனை நாட்கள் வரையிலும் அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியாவில் கொஞ்சம் முதலீடு செய்து வந்தனர். ஆனால் தற்போது இந்தியாவிலும் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் அன்னிய முதலீடுகள் குறையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்னிய முதலீடுகள் வெளியேறலாம்
இது தவிர ஏற்கனவே செய்யப்பட்டிருந்த முதலீடுகளும் பாதுகாப்புகளை காரணம் காட்டி வெளியேற்றப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை வீழ்ச்சியின் சமீபத்திய நன்மை இருந்த போதிலும், ரூபாயின் பலவீனம் இந்தியாவின் இறக்குமதி மசோதா மீது அழுத்தம் கொடுக்கிறது.
எவ்வளவு வீழ்ச்சி காணும்
வல்லுனர்கள் தேய்மானத்தின் அளவை தற்போது தீர்மானிக்க முடியாது. மேலும் வைரஸ் வெடிப்பு அதன் காலம், மேலும் இதனால் இந்தியாவில் ஏற்படும் பாதிப்பு எவ்வளவு என்று தெரியாது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் ரூபாயின் மதிப்பும் எவ்வளவு வீழ்ச்சி காணும் என்றும் உறுதியாக தெரியாது. ஆனால் நிச்சயம் ரூபாயின் மதிப்பில் அழுத்தம் உருவாகும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications