ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: வாகன உரிமையாளர்களே இனி சுங்கச்சாவடியிலேயே பிடிச்சிடுவாங்க..!!

இந்தியாவில் வாகனங்களுக்கு காப்பீடு என்பது கட்டாயம். இருந்தாலும் பெரும்பாலான நபர்கள் காப்பீட்டை புதுப்பிக்காமல் அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் காப்பீடு இல்லாத வாகனங்களை பிடிக்க புதிய உத்தியை கையில் எடுத்துள்ளது.

இதன்படி, சுங்கச்சாவடிகளை கடக்கும் வாகனங்களின் காப்பீட்டு நிலையை கண்டறியும் புதிய சோதனை திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தொடங்கியுள்ளது. டெல்லியில் உள்ள மண்ட்கா சுங்கச்சாவடியில் இந்த சோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுவதும் இது விரிவாக்கம் செய்யபட திட்டமிடப்பட்டுள்ளது.

ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது: வாகன உரிமையாளர்களே இனி சுங்கச்சாவடியிலேயே பிடிச்சிடுவாங்க..!!

சுங்கச்சாவடியை கடக்கும் வாகனத்தின் பதிவு விவரங்களை, தேசிய தகவல் மையத்தால் பராமரிக்கப்படும் 'வாகன்' தரவுத்தளத்துடன் இந்த தானியங்கி அமைப்பு ஒப்பிட்டு பார்க்கும். அப்போது வாகனத்திற்கு காப்பீடு இல்லை என்பது கண்டறியப்பட்டால், சுங்கச்சாவடியை கடந்த சில நிமிடங்களுக்குள் வாகன உரிமையாளருக்கு SMS எச்சரிக்கை அனுப்பப்படும்.

அந்த மெசேஜில் காப்பீட்டு கொள்கை காலாவதியான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். மேலும், மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் அபராதங்களை தவிர்க்க உடனடியாக காப்பீட்டை புதுப்பிக்குமாறு வாகன உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Also Read

தற்போது வாகனங்களை அடையாளம் காண்பதற்கும் எச்சரிக்கை அனுப்புவதற்கும் மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதுவே தொடர்ந்தால் அபராதம் விதிக்கப்படும் என சொல்லப்படுகிறது. மோட்டார் வாகன சட்டத்தின் பிரிவு 196-ன் கீழ், செல்லுபடியாகும் மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதில் விதிமீறல் முதல் முறையா அல்லது மீண்டும் நிகழ்த்தப்படுகிறதா என்பதை பொறுத்து அபராத தொகை மாறுபடும். முதல் முறை விதிமீறல் என்றால் வாகனத்தின் அடிப்படை காப்பீட்டு பிரிமியத்தின் மூன்று மடங்கு அல்லது 5,000 ரூபாய் என இவற்றில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும். தொடர்ச்சியான விதிமீறல் என்றால் வாகனத்தின் அடிப்படை பிரிமியத்தின் ஐந்து மடங்கு அல்லது 10,000 ரூபாய் என இவற்றில் எது அதிகமோ அது அபராதமாக விதிக்கப்படும்.

Recommended For You

வாகன உரிமையாளர்கள் தங்களது காப்பீடு காலாவதியாகும் முன்பே அவற்றை புதுப்பிக்க ஊக்குவிப்பதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். கட்டாய மூன்றாம் தரப்பு காப்பீட்டு விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்வதோடு, காப்பீடு இல்லாத வாகனங்களால் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு கிடைப்பதில் உள்ள சிக்கல்களை களையவும் இது உதவும்.

இது வரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட உள்ளதால் வாகன ஓட்டிகள் தங்கள் காப்பீடு காலாவதியாகும் தேதிகளை சரிபார்த்து, பொது சாலைகளில் வாகனங்களை இயக்கும் முன் செல்லுபடியாகும் மூன்றாம் தரப்பு காப்பீடு உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது நல்லது. இல்லையெனில் தேவையில்லாமல் அபராதம் செலுத்த நேரிடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+