AI ஏஜென்ட் என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடிப்படையிலான மென்பொருள் அல்லது அமைப்பு, இது மனிதர்களைப் போலவே சிந்தித்து, முடிவுகள் எடுத்து, தன்னிச்சையாக பணிகளைச் செய்யக்கூடியது.
இது ஒரு குறிப்பிட்ட பணியை முடிக்க அல்லது சிக்கலை தீர்க்க தேவையான தகவல்களை திரட்டி, தகவல்களை ஆய்வு செய்து, திட்டமிட்டு, செயல்படுத்துகிறது. இது மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு "டிஜிட்டல் அசிஸ்டென்ட்" என்று கருதலாம், ஆனால் இது மிகவும் புத்திசாலித்தனமாகவும், சுதந்திரமாகவும் செயல்படும் காரணத்தால் இதை வெறுமென SIRI, Alexa உடன் ஒப்பிட முடியாது.

எளிய உதாரணம்:
நீங்கள் வீடுமுறைக்கு குடும்பத்துடன் வெளியூருக்கு ஹாலிடே செல்வதாக வைத்துக்கொள்வோம். ஒரு AI ஏஜென்ட்டிடம், "எனக்கு சென்னையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் பயணம் திட்டமிடு, பட்ஜெட் 20,000 ரூபாய்" என்று கூறினால், அது:
- உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற விமான டிக்கெட்டுகளை தேடி பரிந்துரைக்கும்.
- கோவாவில் உள்ள மலிவு விலை ஹோட்டல்களை பரிசோதித்து முன்பதிவு செய்யும்.
- உணவு, பயண இடங்கள், உள்ளூர் போக்குவரத்து ஆகியவற்றை உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒருங்கிணைக்கும்.
- இவை அனைத்தையும் தானாகவே செய்து, உங்களுக்கு ஒரு முழுமையான பயணத் திட்டத்தை அளிக்கும்.
இதைச் செய்ய, AI ஏஜென்ட் இணையத்தில் தகவல்களை தேடி, தேடிய தகவலை ஒருங்கிணைத்து, நமக்கான பரிந்துரையை கொடுக்க முடிவெடுக்கும். இதனை முன்பதிவு செய்வது போன்ற அடுத்தக்கட்ட பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும். இது கிட்டத்தட்ட ஒரு Travel Agent போலவே செயல்படும். இவை அனைத்தையும் சில நொடிகளில் செய்துவிடும் என்பது தான் வியப்பளிக்கும்.
AI ஏஜென்ட்கள் எவ்வாறு செயல்படுகின்றன?: AI ஏஜென்ட்கள் பல முக்கிய கூறுகளை ஒருங்கிணைத்து செயல்படுவதாக டெக் வல்லுனர்கள் கூறுகின்றனர்.
உணர்தல் (Perception): சுற்றுச்சூழல் தகவல்களைப் புரிந்துகொள்ளுதல். உதாரணமாக, உங்கள் குரல் கட்டளைகள், இணையத் தரவு, அல்லது சென்சார்களில் இருந்து வரும் தகவல்கள் பெற்று அதற்கு ஏற்றவாறு உங்களுடைய கட்டளைகளை செயல்படுத்தும்.
பகுத்தறிதல் (Reasoning): பெறப்பட்ட தகவல்களை பகுத்து, என்ன செய்ய வேண்டும் என முடிவெடுக்கும். உதாரணமாக, உங்கள் பட்ஜெட்டிற்கு எந்த ஹோட்டல் பொருத்தமானது என்பதை ஏஐ ஏஜெண்ட் இணையத்தில் தேடி, பெற்ற தகவல்கள் அடிப்படையில் உங்களுடைய பட்ஜெட் (கட்டளை) ஏற்றவாறு ஹோட்டல் லிஸ்ட்-ஐ தீர்மானிக்கும்.
செயல்படுத்தல் (Action): முடிவுகளை செயல்படுத்துதல், அதாவது ஏஐ ஏஜெண்ட் லிஸ்ட் போட்ட ஹோட்டலை நீங்கள் தேர்வு செய்தால் அந்த ஹோட்டலில் ரூம் முன்பதிவு செய்தல் அல்லது ஹோட்டலை தொடர்பு கொள்ளவோ அல்லது புக்கிங் (தேவையான அனுமதி இருந்தால்) செய்து பணியை முடிக்கும்.
கற்றல் (Learning): அனுபவங்களில் இருந்து கற்று. உதாரணமாக இந்த ஏஐ ஏஜெண்ட்-ஐ பயன்படுத்தி நீங்கள் ஒரு சில முறை ஹாலிடே திட்டமிட்டீர்கள் எனில், அடுத்த முறை நீங்கள் எந்த ஊருக்கு போக வேண்டும், எவ்வளவு பட்ஜெட் என கொடுத்தால் போதும். உங்களுக்கு பிடித்தமான ஹோட்டல் தானாக புரிந்துக்கொண்டு தேர்வு செய்யும். உதாரணமாக, நீங்கள் 3-4 முறை கடற்கரை ஹோட்டல்களை விரும்பி புக் செய்துள்ளீர்கள் எனில் அடுத்த முறை கடற்கரைக்கு அருகில் இருக்கும் ஹோட்டலையே இந்த ஏஐ ஏஜெண்ட் உங்களுக்கு கா்டும். இப்படி ஒவ்வொரு தனிநபருக்கும் ஏஐ ஏஐெண்ட் மூலம் முன்னுரிமைப்படுத்தி தனிப்பட்ட வகையில் சேவை அளிக்கலாம்.
ஏஐ ஏஜெண்ட் எப்படி இயங்குகிறது?:
தரவு சேகரிப்பு: AI ஏஜென்ட் உங்களிடம் இருந்து கட்டளைகளைப் பெறுகிறது (குரல், உரை, அல்லது தரவு). இது தான் ஏஐ ஏஜெண்ட் செயல்படுவதற்கான அடிப்படை மற்றும் முதல் என்டரி பாயின்ட்.
தரவு பகுப்பாய்வு: மெஷின் லேர்னிங் (Machine Learning) மற்றும் இயற்கை மொழி புரிந்துணர்வு (NLP) மூலம் தகவல்களை புரிந்து, நீங்கள் கேட்ட கேள்விக்கு எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு திட்டத்தை உருவாக்குகிறது.
செயல்படுத்துல்: இந்த திட்டத்தை செயல்படுத்த இணையம், API-கள், அல்லது பிற கருவிகளைப் பயன்படுத்தி அடுத்தக்கட்டத்திற்கு செல்கிறது.
ஹோட்டல் உதாரணத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால், மற்றொன்றை பார்ப்போம். ஒரு பெரிய மால் உள்ளது என வைத்துக்கொள்ளுங்கள், இங்கு பல இடத்தில் பல கடைகளுக்கு (ஹோட்டல், பொம்பை கடை, துணிக்கடை, ஷூ கடை, பிளே ஏரியா) ஏற்றவாறு ஏசி செயல்படுத்த வேண்டும் என வைத்துக்கொள்வோம்.
மொத்தமாக ஏசி Temperature-ஐ கன்ட்ரோல் செய்வது எளிது, இதில் வீட்டில் இருக்கும் ஏசி கூட செய்துவிடும். ஆனால் ஒவ்வொரு கடைக்கும் ஏற்றவாறு, மக்கள் வருகை எண்ணிக்கை வைத்து, கடையில் இருக்கும் Temperature, மால் உள்ளே இருக்கும் Temperature, மால்-க்கு வெளியே உள்ள Temperature-ஐ மொத்தமாக கணக்கிட்டு கடைக்குள் நீங்க நிர்ணயம் செய்த Temperature-ஐ செட் செய்ய முடியும். அவை அனைத்தையும் மனிதர்கள் உதவி இல்லாமல் ஏஐ ஏஜெண்ட் மூலம் முடியும், இதற்கு கூகுள் சர்ச் தரவுகள் தேவையில்லை, மாறாக Temperature சென்சார் மூலம் கிடைக்கும் தகவலை வைத்து செயல்படும்.
பின்னூட்டம் (Feedback): கொடுத்த வேலையை செய்து முடித்துவிட்டு இதை எவ்வறு செய்யப்பட்டது, செய்யப்பட்ட பணியில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமான என்ற feedback-ஐயும் ஏஐ ஏஜெண்ட் உங்களுக்கு வழங்கும். தேவைப்பட்டால் இந்த ஏஐ ஏஜெண்ட்-ஏ தேவையான மாற்றங்களைச் செய்யும்.
ஒரு AI ஏஜென்ட் உங்கள் ஈமெயில்-ஐ படித்து, முக்கியமானவற்றுக்கு மட்டும் பதிலளிக்கும் வகையில் செட் செய்யலாம். யாரேனும் உங்களுடன் பேச வேண்டும் என விரும்பி ஈமெயில் அனுப்பியிருந்தால் மீட்டிங்குகளை தானாகவே செட் செய்யலாம். மேலும் நீங்கள் செய்ய வேண்டிய வேலையை ஈமெயிலில் உள்ளதன் அடிப்படையில் பட்டியலிடும் வகையிலும் இந்த ஏஐ ஏஜெண்ட்-ஐ உருவாக்கலாம்.
AI ஏஜென்ட்களை எந்த துறையில் எல்லாம் பயன்படுத்தலாம்: AI ஏஜென்ட்களின் எதிர்காலம் மிகவும் பிரகாசமானது, இவை பல துறைகளில் புரட்சியை ஏற்படுத்தும் திறன் கொண்டவை:
பர்சனல் அசிஸ்டென்ட்: பயணம், ஷாப்பிங், நிதி மேலாண்மை என எல்லா பணிகளையும் ஒரே இடத்தில் உதவிகளை பெறலாம். இது தனிநபர் சேவையில் அல்லது பணியில் அல்லது விருப்பத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்.
வணிக மேம்பாடு: வாடிக்கையாளர் சேவை, மார்க்கெட்டிங், மற்றும் தரவு பகுப்பாய்வு போன்றவற்றை தானியங்கு முறையில் மேம்படுத்தலாம். இதன் மூலம் மனிதர்களால் செய்ய முடியாத துள்ளியமான கணக்கீடு, ஆய்வுகளையும் ஏஜ ஏஜெண்ட் செய்ய முடியும்.
மருத்துவம்: நோயாளிகளின் அறிகுறிகளை ஆய்வு செய்து, மருத்துவர்களுக்கு சிகிச்சை பரிந்துரைகளை வழங்கும் அளவுக்கு தற்போது ஏஐ வளர்ச்சி அடைந்துள்ளது. சமீபத்தில் வெளிநாடுகளில் உடலில் இருக்கும் கேன்சர் அறிகுறிகளை மருத்துவர்களுக்கு பல வருடத்திற்கு பின்பு கண்டறியும் நிலைக்கு முன்பே ஏஐ கண்டுப்பிடிக்கிறது.
தொழிற்சாலைகள்: உற்பத்தி, விநியோகச் சங்கிலி, மற்றும் தரக் கட்டுப்பாட்டை மேம்படுத்தலாம்.
எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும்: இத்தகைய ஏஜ ஏஜெண்ட்-ஐ வைத்து ஒரு பணியை மனிதர்களின் தலையீடு இல்லாமல் முழுமையாக தன்னாட்சியாக செயல்பட முடியும். இதன் மூலம் பொருட்களை விற்பனை செய்வதில் இருந்து, தனிநபர் வாழ்க்கை முடிவுகள் வரையில் முடிவுகளையும், தீர்வுகளையும் எட்டலாம்.
இதை மேம்படுத்த பல AI ஏஜென்ட்கள் ஒன்றாக இணைந்து, சிக்கலான பணிகளை கையாளலாம். உதாரணமாக பெங்களூர் நகரத்தின் போக்குவரத்து ஒவ்வொரு ஏரியாவிலும் ஏஐ கேமரா வைத்து மேம்படுத்தலாம்.
AI ஏஜென்ட்கள் என்பவை இன்றைய சிரி, அலெக்ஸா போன்றவற்றை விட மிகவும் மேம்பட்டவை. இவை மனிதர்களைப் போல சிந்தித்து, சிக்கலான பணிகளை தன்னிச்சையாக செய்யும் திறன் கொண்டவை. எதிர்காலத்தில், இவை நமது அன்றாட வாழ்க்கை, வணிகம், மருத்துவம், கல்வி போன்றவற்றை மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்டது. இவை டெக் உலகின் அடுத்த பெரிய புரட்சியாக இருக்கும்!
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications