ஹிந்துஜா குளோபல் பங்குகள் 20% சரிவு, KPIT டெக்னாலஜிஸ் 19% சரிவு - ஏன்..?!

இன்று மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் கலவையான வர்த்தகத்தைப் பதிவு செய்த காரணத்தால் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான குழப்பம் ஏற்பட்டது. காலை வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 470 புள்ளிகள் வரையில் உயர்ந்து தொடர் உயர்வைப் பதிவு செய்தது. ஆனால் அடுத்த சில மணிநேரத்தில் ஏறிய வேகத்தில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

ஆனால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் மட்டும் அல்லாமல் நிஃப்டி குறியீடும் சரிவில் இருந்து மீண்டு வந்துள்ளது. சென்செக்ஸ் குறியீடு 142.81 புள்ளிகள் உயர்ந்து 59,744.65 புள்ளிகளையும், நிஃப்டி குறியீடு 66.80 புள்ளிகள் உயர்ந்து 17,812.70 புள்ளிகளை அடைந்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் ரீடைல் முதலீட்டாளர்கள் அதிகம் கவனித்த இரு நிறுவனங்கள் ஹிந்துஜா குளோபல் மற்றும் KPIT டெக்னாலஜிஸ். இரு நிறுவனங்களின் அதிகப்படியான உயர்வுக்கும், சரிவுக்கும் என்ன காரணம்..

 ஹிந்துஜா குளோபல்

ஹிந்துஜா குளோபல்

வாரத்தின் கடைசி நாள் வர்த்தகத்தில் ஹிந்துஜா குளோபல் நிறுவனப் பங்குகள் யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. ஹிந்துஜா குளோபல் நிறுவனத்தின் நிர்வாகம் 1:1 போனஸ் பங்குகள் உடன் 3வது இடைக்கால ஈவுத்தொகையாகச் சுமார் ஒரு பங்கிற்கு 150 ரூபாயை அறிவித்தது.

 20 சதவீதம் சரிவு

20 சதவீதம் சரிவு

ஹிந்துஜா குளோபல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முதலீட்டாளர்கள் கலவையான விமர்சனத்தை எதிர்கொண்டது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தையில் ஹிந்துஜா குளோபல் பங்குகள் சுமார் 20 சதவீதம் வரையில் சரிந்து 2,855.45 ரூபாய் வரையில் சரிந்தது.

 முதலீட்டாளர்கள்

முதலீட்டாளர்கள்

ஜனவரி 4ஆம் தேதி ஹிந்துஜா குளோபல் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ஈவுத்தொகை மற்றும் போனஸ் கொடுப்பதற்காக நிர்வாகக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்த நிலையில், ஜனவரி 4ஆம் தேதி 3948 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது. இதைத் தொடர்ந்து போன்ஸ் அறிவிப்புக்கு முன்பு லாபத்தைப் பார்க்க முடிவு செய்த முதலீட்டாளர்கள் ஹிந்துஜா குளோபல் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்தனர்.

 KPIT டெக்னாலஜிஸ்

KPIT டெக்னாலஜிஸ்

இதேவேளையில் இன்று KPIT டெக்னாலஜிஸ் பங்குகள் மதிய வர்த்தகத்தில் சுமார் 18.52 சதவீதம் வரையில் உயர்ந்து ரீடைல் முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தைக் கொடுத்து. இந்தத் திடீர் உயர்வுக்கு மிக முக்கியமான காரணம் ஜனவரி 5ஆம் தேதி கோல்டுமேன் சாச்சஸ் KPIT டெக்னாலஜிஸ் பங்குகளுக்கு Buy என ரேட்டிங் அறிவித்தது. இதுமட்டும் அல்லாமல் டார்கெட் விலையாக 1040 ரூபாயை அறிவித்துள்ளது.

 ஒரு வருட வளர்ச்சி

ஒரு வருட வளர்ச்சி

KPIT டெக்னாலஜிஸ் பங்குகள் கடந்த 6 மாதத்தில் மட்டும் 182.68 சதவீதமும், ஒரு வருடத்தில் 407.22 சதவீதம் வரையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. இன்றைய வர்த்தக முடிவில் 12.48 சதவீதம் வளர்ச்சி அடைந்து 709.10 ரூபாயாக உள்ளது. மேலும் KPIT டெக்னாலஜிஸ் பங்குகளின் 52 வார உயர்வு 750 ரூபாய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+