வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். இது போன்ற நபர்கள் வெளிநாடுகளில் தங்கி படிக்கும்போது, அவர்களின் வாழ்க்கை அனுபவமும் மேம்படும். இருப்பினும், வெளிநாட்டில் படிப்பதற்கான செலவு சற்று அதிகமானதாக இருக்கலாம். எனவே, படிப்பு செலவு குறித்து முன்கூட்டியே யோசித்து, அதற்கேற்ப திட்டமிட்டு வைப்பது அவசியம். இந்தக் கட்டுரையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற பிற நாடுகளில் படிப்பதற்கான செலவுகளைப் பற்றி பார்ப்போம்.

அமெரிக்கா: அமெரிக்காவில் நீங்கள் படிக்க வேண்டுமானால் வருடத்திற்கு ரூ. 19.7 லட்சம் முதல் ரூ. 23.6 லட்சம் வரை செலவு செய்ய வேண்டி இருக்கலாம். இது அங்குள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு ஆகியவற்றை பொறுத்து மாறுபடலாம்.
இங்கிலாந்து: இங்கிலாந்தில் படிப்பதற்கான செலவு ரூ. 15.7 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரை இருக்கும்.
ஜெர்மனி: ஜெர்மனியில் படிப்பதற்கு, வருடத்திற்கு ரூ. 11.9 லட்சம் முதல் செலவாகலாம். இங்கு குறைந்த கல்வி கட்டணத்தில், நிறைய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் உங்களுக்கு பிடித்தமான படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கலாம்.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 23.6 லட்சம் முதல் செலவாகலாம்.
கனடா: கனடாவில் சுமார் 17.3 லட்சம் வரை ஒரு ஆண்டு படிப்பிற்காக நீங்கள் செலவு செய்ய வேண்டி இருக்கலாம்.
சிங்கப்பூர்: சிங்கப்பூரில், ஒரு ஆண்டு கல்வி கட்டணமாக ரூ. 22 லட்சம் முதல் செலுத்த வேண்டி இருக்கும்.
பிரான்ஸ்: பிற நாடுகளை விட பிரான்சில், கல்வி கட்டணம் சற்று குறைவு தான். ஆண்டுக்கு சுமார் ரூ. 14 லட்சம் வரை இங்கு படிப்பவர்களுக்கு செலவாகலாம்.
இத்தாலி: இத்தாலியில் படிக்க ஆண்டுக்கு 9.6 லட்சம் முதல் கட்டணங்கள் இருக்கும்.
நியூசிலாந்து: நியூசிலாந்தில் படிக்க ஆண்டுக்கு சுமார் ரூ. 20.4 லட்சம் ஆகலாம்.
நெதர்லாந்து: நெதர்லாந்தில் படிப்பதற்கு ஆண்டுக்கு ரூ. 15 லட்சம் கட்டணம் இருக்கும்.
பிற செலவுகள்: வெளிநாட்டில் படிப்பதற்கு கட்டண செலவு மட்டும் தான் இருக்கும் என்று சொல்ல முடியாது. அன்றாட செலவுகளையும் நாம் சேர்த்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தங்குமிடம், உணவு, போக்குவரத்து, புத்தக செலவுகள், டியூஷன் பீஸ் மற்றும் இதர செலவுகள் போன்றவை அடங்கும்.
துபாய் போன்ற இடங்களில் படிப்பவர்களாக இருந்தால், அவர்களுக்கு மாதத்திற்கே குறைந்தது ரூ. 30,000 முதல் பணம் தேவைப்படலாம். வெளிநாட்டில் படிப்பதற்கான மொத்த செலவைக் குறிப்பிட்டு நம்மால் கூற முடியாது. ஏனென்றால், படிக்கும் நாடு, ஒரு மாணவர் தேர்ந்தெடுக்கும் படிப்பு மற்றும் வாழ்க்கைச் செலவு என்பனவற்றைப் பொறுத்து, இந்தச் செலவுகள் மாறுபடலாம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் படிப்பவர்களாக இருந்தால், ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ. 23 லட்சம் முதல் ரூ. 25 லட்சம் வரை செலவாகலாம்.


Click it and Unblock the Notifications