சென்னை, பெங்களூரை விட்டுத்தள்ளுங்க.. எதிர்காலத்திற்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ்..!

சென்னை: தற்போது மெட்ரோ அல்லாத நகரங்களில் இடம் வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலும் பெருநகரங்களில் இடத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதனால் பெருவாரியான மக்கள் மெட்ரோ அல்லாத நகரங்களுக்கு குடியேறுவது குறித்து யோசிக்கின்றனர்.

மெட்ரோபொலிட்டன் ஏரியாக்கள் என்று சொல்லப்படுகிற சென்னை, கோயம்பத்தூர், திருச்சி போன்ற இடங்களில் மக்கள் தொகை அதிக அளவில் இருக்கிறது. இதனால் இதுபோன்ற இடங்களில் வீட்டு வசதிக்கான தேவையும் அதிகரிக்கிறது.

 சென்னை, பெங்களூரை விட்டுத்தள்ளுங்க.. எதிர்காலத்திற்கு இதுதான் பெஸ்ட் சாய்ஸ்..!

குஷ்மேன், வேக்ஃபீல்டு மற்றும் இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) இணைந்து மேற்கொண்ட சமீபத்திய பகுப்பாய்வில், இந்தியாவின் மக்கள்தொகையில் சுமார் 35 % தற்போது நகர்ப்புறங்களில் வசிப்பதாகத் தெரியவந்துள்ளது. மேலும் இந்த மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

பெருகிவரும் இந்த மக்கள் தொகையால், பெருநகரங்களில் மிகப்பெரிய அழுத்தம் ஏற்படுகிறது. அதாவது அங்கு ஏற்கனவே வசிக்கும் மக்கள் உட்பட, புதிதாக குடியேறும் மக்களுக்கு போதுமான இடவசதி இல்லாமல் போகக் கூடும். இதனால் வணிகம் மற்றும் வீட்டு வசதிக்காக, மக்கள் பிற இடங்களை தேர்ந்தெடுக்கக் கூடும்.

ஆதலால், மெட்ரோ அல்லாத நகரங்களில் மக்கள் குடியேறுவதற்கு, அதிக வாய்ப்பு உள்ளது என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும் 2050 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் நகரங்களில் குடியேறுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஜெய்பூர், புவனேஸ்வர், நாக்பூர், சூரத், கொச்சி போன்ற நகரங்களிலும் மக்கள் தொகை அதிகரித்து வருகின்றது. குறைந்த விலையில் கிடைக்கும் சொத்துக்கள் போன்ற காரணங்களால், இது போன்ற நகரங்களில் மக்களின் குடியேற்றம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

மெட்ரோ நகரங்களை விட மெட்ரோ அல்லாத நகரங்கள், நிறைய நன்மைகளைக் கொண்டுள்ளன. பல முதலீடாளர்களையும், இது ஈர்க்கும் விதமாக உள்ளது. பெருநகரங்கள் அல்லாத டயர் 2 நகரங்களில், ரியல் எஸ்டேட் முதலீட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

செலவுகள் குறைவு: மெட்ரோ நகரங்களை விட பிற நகரங்களில் குடும்பச் செலவுகள் மற்றும் இதர செலவுகளும் குறைந்த அளவில் உள்ளன. இதுவே மக்களை ஈர்க்கும் காரணியாக இருக்கிறது என்பதே நிபுணர்களின் கருத்து.

வாழ்க்கைத் தரம்: மெட்ரோ நகரங்களை காட்டிலும் குறைவான போக்குவரத்து நெரிசல், குறைந்த மாசு மற்றும் அமைதியான சூழல் ஆகியவற்றால் மக்கள் ஈர்க்கப்படுகின்றனர்.

அரசின் முயற்சிகள்: இது போன்ற நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் மெட்ரோ நகரங்களை போலவே போக்குவரத்து நெட்வொர்க்குகளை அதிகரிப்பது, விமான நிலையங்கள் அமைப்பது, நெடுஞ்சாலைகள் மற்றும் நிலையான எலக்ட்ரிசிட்டி வழங்குவது என அனைத்தும் அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இதுவும் மக்களின் அலை இதுபோன்ற நகரங்களில் திரும்புவதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

ரியல் எஸ்டேட் வளர்ச்சி இதன் காரணமாகவே டயர் 2 நகரங்களில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் டயர் 2 நகரங்களில், மக்கள் வீடுகளை வாங்குவதற்கு முனைப்புடன் இருக்கின்றனர். டயர் 1 நகரங்களை விட, டயர் 2 நகரங்களில் சொத்துக்களின் விலை குறைவாகவே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+