சென்னை: விவசாயிகளுக்கு உதவும் வகையில், நாட்டில் உள்ள நலிவுற்ற விவசாயிகளுக்கு ஆண்டு வருமானத்தை அதிகரிக்கும் விதமாக மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா (PM - KISAN) திட்டம். இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகள் ஆண்டு வருமானத்தைப் பெற முடியும். இந்த பிஎம் கிசான் திட்டத்திற்கு யார் விண்ணப்பிக்க முடியும், எப்படி விண்ணப்பிப்பது மற்றும் இதர விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டு வருமானமாக ரூ. 6000 நிதி வழங்கப்படுகிறது. மேலும் இதனை மூன்று தவணைகளில் மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தத் திட்டம் பிப்ரவரி 1, 2019 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த திட்டத்தினை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு, அவரது பேங்க் அக்கவுண்டில் ரூ. 2000, மூன்று தவணையாக செலுத்தப்படுகிறது. எனவே, மொத்தமாக ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் ரூபாய் வருமானம் வழங்கப்பட்டு வருகிறது.

பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் என்று சொல்லப்படுகிற பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். மேலும், இது கிராமப்புற மற்றும் நகர்ப்புற விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் வகையில் செயல்பட்டு வருகிறது.
உங்கள் வங்கி கணக்கில் இந்த ரூ. 6000 ரூபாய் தொகையை பெற வேண்டும் என்றால் அதற்கு நீங்கள், பிஎம் கிசான் கணக்குகளுடன் உங்களது ஆதார் கார்டை இணைத்து இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தில் எப்படி சேர்வது? இந்த திட்டத்தினை பயன்படுத்தி வருமானம் பெற, ஒருவர் நிலத்தின் உரிமையாளராக இருக்க வேண்டும். ஒரு வேலை வேறு ஒரு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து கொண்டு இருந்தாலும், அந்த நிலத்தின் பெயர் விண்ணப்பிப்பவரின் பெயரில் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பவரின் பெயருக்கு பதிலாக அவரது குடும்பத்தின் பெயர் இருந்தால், பிஎம் கிசான் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
பிஎம் கிசான் திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது?: இந்த திட்டத்திற்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும்.
ஸ்டேப் 1: முதலில் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
ஸ்டேப் 2: தற்போது வெப்சைட்டின் வலது பக்கம் இருக்கும் " Farmer New Registration" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 3: ஆதார் நம்பர், ஸ்டேட், மொபைல் நம்பர் போன்றவற்றை நிரப்பி "Get OTP" என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டேப் 4: இப்போது மாவட்டம்,கிராமம், பாலினம், பெயர் போன்ற இதர விவரங்களை என்டர் செய்யவும்.
ஸ்டேப் 5: விவசாய நிலம் சம்மந்தமான விவரங்களையும் கொடுத்து "Save" செய்ய வேண்டும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications