சென்னை: நிறைய முதலீட்டு திட்டங்கள் நாட்டில் உள்ளன. மக்கள் அனைவரும் தாங்கள் ஒரு பாதுகாப்பான மற்றும் நல்ல முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு உதவும் வகையில், அரசு பல நல்ல திட்டங்களை அறிமுகம் செய்கிறது. அப்படிப்பட்ட ஒரு நல்ல திட்டமான "கிசான் விகாஸ் பத்ரா" திட்டத்தினை பற்றியும், அதற்கு யார் விண்ணப்பிக்க முடியும் என்பது பற்றியும், எவ்வாறு விண்ணப்பிப்பது போன்ற விவரங்களையும் இந்தப் பதிவில் பார்ப்போம்.
அரசு திட்டமான KVP என்று சொல்லப்படுகிற, இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டம், மத்திய அரசால் நிர்வகிக்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் நாட்டிலுள்ள எந்த தபால் நிலையத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம். மற்ற முதலீட்டு திட்டங்களைப் போலவே இந்த திட்டமும் பல்வேறு நன்மைகளை வழங்குகின்றது. இதன் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் முதலீடு செய்த நாளிலிருந்து 115 மாதங்களில் உங்களுடைய முதலீட்டுத் தொகை இரட்டிப்பாகும்.

கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் யாரெல்லாம் முதலீடு செய்ய முடியும்?: கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு விண்ணப்பிக்க, எந்த ஒரு வயது வரம்பும் இல்லை. நீங்கள் தனிநபராகவோ அல்லது கூட்டுக்கணக்காகவோ, இந்த திட்டத்தினைத் தொடங்கலாம். இது தவிர 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் பெயர்களில், இந்த திட்டத்தினை தொடங்க முடியும். மேலும், மனநிலை சரியில்லாத குழந்தைகளுக்கு, அவர்களின் பெற்றோர் பெயரில் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தினை தொடங்கலாம். குறைந்தபட்ச முதலீடாக ரூ. 1000 ரூபாயிலிருந்து முதலீடு செய்ய முடியும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய எந்த ஒரு அதிகபட்ச முதலீட்டு அளவும் இல்லை. நீங்கள் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.
நீங்கள் இந்த திட்டத்தினை தொடங்கி முதலீடு செய்ய ஆரம்பித்ததில், இருந்து 115 மாதங்களில் உங்களுடைய முதலீடு இரட்டிப்பாகும். அதாவது கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகள் முதலீடு செய்யும் போது, உங்களுடைய முதலீட்டு தொகை இரட்டிப்பாகிறது. இந்த திட்டத்திற்கு 7.5 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. சான்றாக நீங்கள் ரூ. 2 லட்சம் முதலீடு செய்தால் 115 மாதங்களுக்குப் பிறகு ரூ. 4 லட்சம் ரூபாய் பெறுவீர்கள்.
கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு விண்ணப்பிக்க தேவைப்படும் ஆவணங்களாக பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, ஆதார் கார்டு மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் கிடைக்கும் கேவிபி விண்ணப்பப் படிவம் போன்றவை தேவைப்படும்.
இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதால் கிடைக்கும் நன்மைகள்: இது அஞ்சல் அலுவலகத் திட்டம் என்பதால், நீங்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு அரசாங்க உத்தரவாதம் உள்ளது. நாம் முதலீடு செய்த பணம் கிடைக்குமா, கிடைக்காதா என்று நீங்கள் பயப்படத் தேவையில்லை. கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு, நீங்கள் அருகிலுள்ள தபால் நிலையங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். அனைத்து ஊர்களிலும் தபால் நிலையங்கள் இருப்பதால், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க மிகவும் எளிதாக உள்ளது. இந்தத் திட்டமானது கிட்டத்தட்ட ஒன்பதரை ஆண்டுகள் முடியும்போது, முதிர்ச்சி அடையும். ஆனால், உங்களது கணக்கில் தொகை இருப்பு இருக்கும் வரை உங்களுக்கு வட்டி அளிக்கப்படும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்



Click it and Unblock the Notifications