அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் மத்தியிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை, Dubai உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பகுதிகளில் பெரிய வெடிப்பு சத்தங்களுடன் ஈரான் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த சம்பவம், வளைகுடா பகுதியில் பாதுகாப்பு சூழ்நிலை மீண்டும் மோசமடைய செய்துள்ளது. இதனால் மீண்டும் விமான போக்குவரத்து சேவையில் பாதிக்க துவங்கியுள்ளது. மேலும் துபாய், அபுதாயில் இருக்கும் வெளிநாட்டினர் சொந்த ஊருக்கு செல்வதிற்கு தீவிரமாக முயற்சி செய்ய துவங்கியுள்ளனர்.

துபாய் ஏர் டிபென்ஸ்
ஐக்கிய அரபு அமிரீகத்தின் பாதுகாப்பு அமைப்புகள் ஈரானிலிருந்து வரும் டிரோன் ஏவுகணைகளை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாய் நகரம் மட்டுமின்றி, எமிரேட்ஸ் முழுவதும் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டன.
இந்த தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக ஏர் டிபென்ஸ் அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதால் பெரிய சேதங்கள் தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த பதற்றமான சூழ்நிலையில், உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான Dubai International Airport தற்காலிகமாக சேவையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதும், விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
எண்ணெய் கிடங்கு மீது ட்ரோன் தாக்குதல்
மேலும் Fujairah பகுதியில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த பகுதி, ஓமான் வளைகுடா கரையில் அமைந்த முக்கியமான எரிசக்தி தளமாகும். இதற்கு முன்பும் பல முறை தாக்குதலுக்கு உள்ளான இந்த இடம் மீண்டும் குறிவைக்கப்பட்டிருப்பது, எரிபொருள் குறித்து புதிய அசத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உயிர் சேதம் எதுவும் இல்லை என்றாலும், கச்சா எண்ணெய் சப்ளை செயினில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
சவுதி, கத்தார்-ல் தாக்குதல்
துபாய்,ஓமான் தாண்டி சவுதி அரேபியா-வின் கிழக்கு மாகாணத்தில், முக்கிய எண்ணெய் கட்டமைப்புகள் உள்ள பகுதிகளில் 12க்கும் அதிகமான ட்ரோன்கள் தடுக்கப்பட்டதாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் கத்தார் நாட்டின் தலைநகரான Doha நகரிலும் குண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன. ஏவுகணைகள் தடுக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரானின் தீவிரமான தாக்குதலுக்கு என்ன காரணம்?
ஈரான் அரசு வளைகுடா பகுதிகளில் அமெரிக்க தளங்கள் குறிவைத்து தாக்குதல்களை அதிகரித்துள்ளது. இதற்குக் காரணமாக, அமெரிக்கா சமீபத்தில் ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான Kharg Island மீது மேற்கொண்ட தாக்குதல் தான். அந்த துறைமுகத்தில் தான் ஈரானின் மொத்த எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90% கையாளுகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரான் தனது இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளதாக சர்வதேச வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலைமை நீடித்தால், உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக எண்ணெய் விலை உயர்வு, கப்பல் போக்குவரத்து சிக்கல்கள் மற்றும் விமான சேவை பாதிப்பு போன்றவை உலக நாடுகளின் பொருளாதாரத்தை தலைகீழாக புரட்டிப்போடலாம்.


Click it and Unblock the Notifications