இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஏற்றுமதி தொழில்கள் அமெரிக்க சந்தையை தான் சார்ந்துள்ளன. ஆனால் கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.
அமெரிக்க அரசின் 50% இறக்குமதி வரி விதிப்பு இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த சூழலில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

மத்திய அரசு இந்தியாவில் ஏற்றுமதி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 25,060 கோடி ரூபாய். இதில் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் கடன் வசதி வழங்குவதற்காக 20,000 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்திருக்கிறது .அதாவது அடமானம் இல்லாத கடன் உதவிகளாக இந்த தொகை வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசு ஏற்றுமதி துறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த திட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ஏற்றுமதியாளர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட கடன் உத்திரவாத திட்டத்தில் எம்எஸ்எம்இ உட்பட தகுதி உள்ள அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் 20,000 கோடி ரூபாய் வரை கூடுதல் கடன் வசதிக்காக ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அடமானம் இல்லாமல் கடன் கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம் ஏற்றுமதியாளர்களின் பணப்புழக்கத்தை இது வலுப்படுத்தும். மேலும் புதிய சந்தைகளில் அவர்கள் கால் பதிக்க உதவும் என சொல்லப்படுகிறது. மத்திய அரசின் ஏற்றுமதியாளர்களுக்கான இந்த கடன் உத்திரவாத திட்டத்தின் கீழ் தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் மூலம் 100% உத்தரவாத கவரேஜ் உடன் 50 கோடி ரூபாய் வரை கூடுதலாக கடன் கிடைக்கும்.
அதாவது தகுதிவாய்ந்த ஏற்றுமதி நிறுவனம் 50 கோடி ரூபாய் வரை கடன் பெறலாம் என சொல்லப்படுகிறது. நேரடி மற்றும் மறைமுக ஏற்றுமதியாளர்கள் அனைவருக்குமே இந்த கூடுதல் கடன் அவர்களுக்கான மூலதன தொகையாக மாறும். எனவே அவர்கள் அமெரிக்காவுக்கு மாற்றாக மற்ற சந்தைகளில் கால் பதிக்க முடியும்.
2026 மார்ச் 31ஆம் தேதி வரை அல்லது 20000 கோடி ரூபாய் கடன் முழுவதுமாக வழங்கப்படும் வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும். ஒவ்வொரு கடனும் நான்காண்டு காலம் அவகாசத்தை கொண்டதாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வங்கிகள் நிதி நிறுவனங்கள் இந்த கடன்களை வழங்கலாம் .
ஏற்றுமதியாளர்கள் புதிதாக எந்த சொத்துக்களையும் அடமானம் வைக்காமல் ஏற்கனவே வங்கிகளில் வைத்த பிணயத்திற்கு இந்த கூடுதல் தொகையை கடனாக பெற முடியும். இது தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஜவுளி ,தோல் ,ஆபரணங்கள், பொறியியல் பொருட்கள் ,கடல்சார் பொருட்கள் போன்ற துறைகளில் இயங்கும் நிறுவனங்ளுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications