சென்னை ஐடி ஊழியர்களுக்கு யோகம் தான்.. ஓரே நாளில் 3 நிறுவனங்களா.. வாவ், வாவ்..!!

சென்னை தொடர்ந்து பல வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்த்து வரும் இதேவேளையில் ஏற்கனவே இந்நகரத்தில் இருக்கும் பல ஜிசிசி அலுவலகங்கள் தனது இருப்பை அதிகரிக்கவும், அதிகப்படியான ஊழியர்களை நியமிக்கவும் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. ஏற்கனவே சென்னையில் 300க்கும் அதிகமான ஜிசிசி-களின் இருப்பிடமாக இருக்கும் வேளையில் 3 நிறுவனங்கள் விரிவாக்கத் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

Exterro, Ephicacy மற்றும் Barclays போன்ற முன்னணி நிறுவனங்கள் தனது அலுவலகங்களை விரிவாக்கம் செய்து, ஊழியர்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இந்த 3 நிறுவனங்களும் ஓரே நாளில் தனது அலுவலகத்தை விரிவாக்கம் செய்யும் முடிவைக் கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐடி ஊழியர்களுக்கு யோகம் தான்.. ஓரே நாளில் 3 நிறுவனங்களா.. வாவ், வாவ்..!!


Barclays விரிவாக்கம்: பிரிட்டன் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் நிதி சேவைகள் நிறுவனமான Barclays, சென்னையின் DLF Cybercityயில் தற்போது இயங்கி வரும் வேளையில், இதே டெக் பார்க்கில் ஒரு புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்திற்கு இடம் மாறியுள்ளது.

இந்த புது அலுவலகம் மூலம் கூடுதலாக வேலைவாய்ப்பு கிடைப்பது மட்டும் அல்லாமல் சென்னை ஊழியர்களின் பணிச் சூழல் பெரிய அளவில் மேம்படும். பார்க்லேஸ் சமீபத்தில் சுமார் 150,000 சதுர அடி அலுவலக இடத்தை வாடகைக்கு எடுத்தது, இந்த இடத்தில் தான் தற்போது தனது அலுவலகத்தை நகர்த்தியுள்ளது.

Exterro விரிவாக்கம்: கோயம்புத்தூர்-ஐ தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் SaaS யூனிகார்ன் நிறுவனமான Exterro, சென்னையில் ஒரு புதிய டெவலப்மென்ட் சென்டரை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கை, சென்னையின் தொழில்நுட்ப சுற்றுச்சூழலை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மென்பொருள் துறையில் புதிய வேலை வாய்ப்புகளையும் வழங்கும்.

ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தடயவியல் ஆய்வகம்: Exterro நிறுவனம் சென்னையில் அமைக்கும் டெவலப்மென்ட் சென்டரை ஆசியாவின் மிகப்பெரிய டிஜிட்டல் தடயவியல் ஆய்வகத்தை அமைக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த டெவலப்மென்ட் சென்டர் டிஜிட்டல் தடயவியல் சேவைகளுக்கான அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்யும்.

Ephicacy வளர்ச்சி: அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட மருத்துவ ஆராய்ச்சி மற்றும் டேட்டா அனலிசிஸ் நிறுவனமான Ephicacy, பெங்களூரு அலுவலகத்தைப் புதுப்பித்து இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளது. இது இந்தியச் சந்தை மீதான இந்நிறுவனத்தின் நம்பிக்கையின் ஆதாரமாக இந்த விரிவாக்கம் விளங்குகிறது.

புதிய சென்னை அலுவலகம்: இதேவேளையில் Ephicacy சென்னையில் புதிய அலுவலகத்தை நிறுவ உள்ளது, சென்னையில் புதிய தொழில்நுட்ப மையத்தை திறப்பது மூலம் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் டேட்டா அனலிசிஸ் துறையில் சென்னையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கும்.

Exterro, Ephicacy மற்றும் Barclays ஆகியவற்றின் விரிவாக்கங்கள், சென்னை உலகளாவிய தொழில்நுட்ப மையமாக வளர்ந்து வருவதைக் குறிக்கின்றன. இந்த நிறுவனங்களின் விரிவாக்கங்கள் சென்னை மற்றும் அதன் தொழில்நுட்ப நிபுணர்களுக்குப் பல நன்மைகளை வழங்குகின்றன.

வேலை வாய்ப்பு: புதிய அலுவலகங்களை நிறுவுவதும், தற்போதுள்ள செயல்பாடுகளை விரிவுபடுத்துவதும், சென்னையின் தொழில்நுட்ப நிபுணர்களுக்கு மென்பொருள் மேம்பாடு, தரவு பகுப்பாய்வு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் நிதி சேவைகள் போன்ற பல்வேறு துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.

பொருளாதார வளர்ச்சி: வெளிநாட்டு முதலீட்டின் வருகை மற்றும் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்யும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+