சர்வதேச பொருளாதார வளர்ச்சியின் போக்கை கொரோனாவுக்குப் பின்பும் மந்தமாக இருக்க முதலும் முக்கியமான காரணம் ரஷ்யா - உக்ரைன் போர்.
உக்ரைன் NATO அமைப்பில் சேர்வதற்காக விண்ணப்பம் செய்துள்ள வேளையில் அமெரிக்கா தனது வருடாந்திர அணுசக்தி விமானங்களின் பயிற்சியைச் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தப் பதற்றமான சூழ்நிலையில் ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல்களை நடத்தி வருவது மட்டும் அல்லாமல் ரஷ்யாவில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள், சொத்துக்களைத் தனதாக்கிக் கொண்டு வருகிறது ரஷ்யா.
ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் துவங்கிய பின்பு உலக நாடுகளில் இருக்கும் ரஷ்ய அரசு மற்றும் ரஷ்ய பணக்காரர்களின் சொத்துக்கள், பணம், முதலீடுகள் ஆகிய அனைத்தையும் கைப்பற்றிய நிலையில், ரஷ்யாவும் தனது பங்கிற்கு அந்நாட்டில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களை விரட்டி வருகிறது. இதில் தற்போது மாட்டிக்கொண்டது எக்சான் மொபில்.
மேற்கத்திய நாடுகளின் தடை
மேற்கத்திய நாடுகளின் மோசமான தடை உத்தரவின் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த பல வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேறி வருகிறது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட ரஷ்யா ஒரு பைசா கூட அளிக்காமல் வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துக்களைக் கைப்பற்றி வருகிறது.
எக்சான் மொபில்
ரஷ்யாவின் முக்கியமான எண்ணெய் திட்டத்தில் எக்சான் மொபில் 30 சதவீத பங்குகளை வைத்திருக்கும் நிலையில், 7 மாதமாக ரஷ்ய அரசுடன் எக்சான் மொபில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் எவ்விதமான முன்னேற்றமும் இல்லை. இதேவேளையில் எக்சான் மொபில் சொத்துக்களை விளாடிமிர் புதின் பறிமுதல் செய்யத் துவங்கியுள்ளார்.
4 பில்லியன் டாலர்
இதனால் எக்சான் மொபில் நிறுவனத்திற்குச் சொந்தமான 4 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்களைக் கைப்பற்றியுள்ளது ரஷ்யா, இதன் மூலம் ஒரு ரூபிள் அல்லது டாலர் கூட இல்லாமல் ரஷ்யா விட்டு வெளியேறுகிறது எக்சான் மொபில். ரஷ்யா தனது எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தை வைத்துக்கொண்டு ஐரோப்பிய மற்றும் பிரிட்டன் நாடுகளைப் பழிவாங்கி வருகிறது.
வெளிநாட்டு நிறுவனங்கள்
எக்சான் மொபில் மட்டும் அல்லாமல், BP, டோட்டவ் எனர்ஜிஸ், ஈக்வினார், ஷெல் ஆகிய எண்ணெய் நிறுவனங்கள் உட்பட மெட்டா, கூகுள், அமெரிக்க வங்கிகள் எனப் பல தரப்பினர் மேற்கத்திய நாடுகளின் தடை உத்தரவு காரணமாக ரஷ்யா நாட்டை விட்டால் போதும் என்ற அளவில் கிளம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications