உலகின் முன்னணி கணக்கியல் மற்றும் ஆலோசனை நிறுவனங்களில் ஒன்றான எர்ன்ஸ்ட் அண்ட் யங் (EY - Ernst & Young) தனது ஊழியர்களுக்கு புதுமையான ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அனைத்து வேலைகளிலும் ஏஐ பெருமளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் சூழலில், மனிதர்களின் தனித்துவமான திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் அமெரிக்க பிரிவான EY US போனஸ் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பணியிடத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல், மனித திறன்களை வெளிப்படுத்தும் ஊழியர்களை பாராட்டி பரிசளிக்க 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 800 கோடி) தொகையை இந்நிறுவனம் ஒதுக்கீடு செய்துள்ளது.

தற்போது நிறுவனங்கள் வழக்கமான வேலைகளை செய்யவும், தகவல்களை பகுப்பாய்வு செய்யவும், உற்பத்தி திறனை மேம்படுத்தவும் ஏஐ கருவிகளை அதிகளவில் நம்பியுள்ளன. இதனால் ஏஐ தொழில்நுட்பத்துடன், வணிக ரீதியான புரிதல், கொண்டு வேலைகளை ஒன்றிணைத்து செயல்படும் ஊழியர்களை ஊக்குவிப்பதே இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகும்.
எனவே AI-ஆல் எளிதில் ஈடுசெய்ய முடியாத மனித திறன்களே எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு மிகவும் அவசியமானவை என இந்நிறுவனம் கருதுகிறதாம். தங்கள் சக பணியாளர்கள் புதிய விஷயங்களை கற்றுக்கொள்ளவும், புதிய முயற்சிகளை சோதிக்கவும், ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றவும், அன்றாட பணிகளில் தலைமை ஏற்று செயல்படவும் செய்தால் போனஸ் உண்டு.
புதிய யோசனைகள், தொழில்நுட்பம் அல்லது வணிக வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் நிறுவனத்தில் உண்மையான நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் ஊழியர்களின் பணி இப்பிரிவின் கீழ் பாராட்டப்படும். ஒரு தனிநபரோ அல்லது குழுவோ செய்யும் சாதனையால் EY நிறுவனத்திற்கு நீண்ட காலத்திற்கு பயன்தரும் விஷயம் ஏற்படுமானால், அவர்கள் இப்பிரிவின் கீழ் வெகுமதி பெறுவார்கள்.
இந்த திட்டத்தில் Spot bonus முறையில் பணியாளர்களுக்கு 500 டாலர் வரை உடனடியாக வழங்கப்படலாம். பெரிய அளவிலான சாதனைகளை புரியும் தனிநபர்கள் அல்லது குழுக்களுக்கு 10,000 டாலர் முதல் 25,000 டாலர் வரை பரிசுகள் வழங்கப்படும். இதுகுறித்து பேட்டி அளித்துள்ள EY அமெரிக்காவின் தலைமை நிர்வாக அதிகாரி டான்டே எதிர்காலத்திற்கான பணியாளர் படையை உருவாக்குவதற்காகவே இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
அதாவது ஏஐ கருவிகளையே முழுமையாக சார்ந்திருக்காமல், வேலையில் ஏஐ கொஞ்சம் மனிதர்களின் திறன் அதிகம் என்ற விகிதத்தில் வேலை செய்தால் நிச்சயம் பரிசு காத்திருக்கிறது என்பதே இவர்கள் கூறம் வரும் விஷயமாகும். அதிகமான ஏஐ பயன்பாட்டால் ஊழியர்களின் திறன்கள் காலப்போக்கில் மறைந்து போகின்றன. எனவே தான் இப்படி ஒரு போனஸ் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாம்.


Click it and Unblock the Notifications

