இந்திய டெக் ஊழியர்களை கட்டம் கட்டி தூக்கும் FAAMNG நிறுவனங்கள்.. ஓ இதுதான் காரணமா..?

பேஸ்புக் (மெட்டா), அமேசான், ஆப்பிள், மைக்ரோசாப்ட், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் கூகுள் (ஆல்பபெட்) ஆகிய டாப் டெக் நிறுவனங்களை சுருக்கமாக FAAMNG நிறுவனங்கள் என அழைப்பதுண்டு. டெக் உலகில் மிகப்பெரிய நிறுவனங்கள் என்றால் இவை தான்.

கடந்த 3 வருடங்களாக FAAMNG நிறுவனங்கள் உலகளவில் பணி நீக்கங்கள் மற்றும் கடினமான வணிக சூழலுக்குப் பிறகு தற்போது புதிய வர்த்தக முடிவுகளை எடுத்து வருகிறது. FAAMNG நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் பாலைவனம் போல் இருந்த நிலையில் தற்போது, சின்ன சின்ன செடிகளும், பூக்களும் பூக்க துவங்கியுள்ளது.

 இந்திய டெக் ஊழியர்களை கட்டம் கட்டி தூக்கும் FAAMNG நிறுவனங்கள்.. ஓ இதுதான் காரணமா..?

குறிப்பாக இந்தியாவில் இருக்கும் FAAMNG நிறுவனங்களின் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.

பிரபலமான பணியமர்த்தல் நிறுவனமான எக்ஸ்ஃபீனோ (Xpheno) வழங்கிய தகவலின்படி, ஜூன் 2024 நிலவரப்படி, FAAMNG நிறுவனங்களில் தற்போது 5,500 வேலைவாய்ப்புகள் இந்தியாவில் மட்டும் உள்ளன. இருப்பினும், இந்தியாவில் உள்ள இந்த நிறுவனங்கள் பொதுவாக வழங்கும் வேலைவாய்ப்புகளை விட இது சுமார் 50 சதவீதம் குறைவாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.

எக்ஸ்ஃபீனோ நிறுவனம் கூறுகையில், 2022 டிசம்பரில் FAAMNG நிறுவனங்களின் வேலைவாய்ப்புகள் 2,000 ஆக இருந்த நிலையில், 2023 டிசம்பரில் இது வெறும் 200 ஆக இருந்தது மட்டும் அல்லாமல் மிகவும் குறைவாக இருந்தது.

தற்போது கிடைக்கும் வேலைவாய்ப்புகள் இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், ஆப்ரேஷன்ஸ், சேல்ஸ் திட்டங்கள் மற்றும் திட்ட மேலாண்மை துறைகளில் உள்ளன. வேலைவாய்ப்பு தேவை அதிகம் உள்ள இடங்களாக பெங்களூரு (31 சதவீதம்), ஹைதராபாத் (17 சதவீதம்), சென்னை (4 சதவீதம்) மற்றும் டெல்லி என்.சி.ஆர் (4 சதவீதம்) ஆகிய பகுதிகளில் பரவி உள்ளன.

உலகளவில் FAAMNG நிறுவனங்களில் தற்போது 40,000 க்கும் மேற்பட்ட பணிகள் காலியாக உள்ளது. இது 2021 இல் இருந்த எண்ணிக்கை ஆகும்.

டீம் லீஸ் டிஜிட்டலில் நிறுவனத்தின் ஐடி பணியமர்த்தல் துறையின் தலைவர் கிருஷ்ண விஜய் கூறுகையில், 2023 ஆம் ஆண்டில், இந்த முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பொருளாதார சவால்கள் மற்றும் உலகளாவிய பணி நீக்கங்கள் காரணமாக இந்தியாவில் பணியமர்த்தலை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைத்தது.

செலவு குறைப்பு மற்றும் நிறுவன மறுசீரமைப்புக்காக இந்த FAAMNG நிறுவனங்கள் தற்போது பல பணிகளை இந்தியாவுக்கு மாற்றுகின்றன. இதன் மூலம், மாற்று பணியிடங்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது, மேலும் இந்தியா போன்ற வளர்ச்சி நோக்கிய சந்தையில் புதிய வாய்ப்புகளும் உருவாகின்றன என்று தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+