பெரு நிறுவனங்களை நிர்வாகம் செய்வது என்பது மிகவும் கடினமான விஷயம் குறிப்பாக உலக நாடுகள் முழுவதும் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இன்னும் கடினம். இந்தச் சூழ்நிலையில் இந்த இரு பிரச்சனைகளைத் தாண்டி பேஸ்புக் தான் எப்படிப்பட்ட நிறுவனம் என்பதைக் காட்டுவதில் நீண்ட காலமாகப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாகவே பேஸ்புக் நிறுவனம் விர்ச்சுவல் உலகைக் கட்டமைக்கும் மாபெரும் திட்டத்திற்கு 10 பில்லியன் டாலர் முதலீட்டை அறிவித்த பின்பு, தான் ஒரு சமூகவலைத்தள நிறுவனம் மட்டும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக முதலீட்டாளர்களுக்கும் மக்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காகப் பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை Meta எனப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
அப்போ பேஸ்புக் செயலியின் பெயர் மாறிவிடுமா..?!
பேஸ்புக்
பேஸ்புக் என்பது இந்நிறுவனத்தின் முக்கியமான வர்த்தகப் பொருளாக இருந்தாலும் இந்தப் பெயரின் கீழ் தான் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், அகுலஸ் ஆகிய அனைத்து நிறுவனங்களும் உள்ளது. இந்நிலையில் அனைத்து நிறுவனத்தையும் இணைக்கும் ஒரு ஹோல்டிங் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக Meta எனப் பெயரில் நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது.
Meta பெயர் மாற்றம்
இப்புதிய மாற்றத்தின் கீழ் இனி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், அகுலஸ் ஆகிய நிறுவனங்களைப் போலப் பேஸ்புக்-ம் ஒரு தனிக் கிளை நிறுவனமான மெட்டா-வின் கீழ் இயங்கும். இதேபோலத் தான் கூகுள் நிறுவனம் தனது நிர்வாகம் அனைத்தையும் ஆல்பபெட் என்ற நிறுவனத்தின் கீழ் கொண்டு வந்தது.
குற்றச்சாட்டுகள்
மக்களும், அரசும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் மீது அதிகளவிலான குற்றச்சாட்டுகளை வைத்து வருவது மட்டும் அல்லாமல் இளம் தலைமுறையினர் அதிகளவில் இந்தச் சமுகவலைதளத்தில் இயங்கி வரும் காரணத்தால் இதில் இருந்து பிற நிறுவனங்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற திட்டத்துடன் Meta என்ற ஹோல்டிங் நிறுவனம் உருவாக்கப்பட்டு உள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க்
இதுக்குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் கூறுகையில் விர்ச்சுவல் ரியாலிட்டி வர்த்தகத்தை மையமாக வைத்து பேஸ்புக் பெயரை மெட்டா எனப் பெயர் மாற்றியுள்ளோம், மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் உருவாக்குவதில் பெரிய அளவில் உதவி செய்ய உள்ளது.
3டி முறையில் மக்களை இணைப்பு
சமுக வலைத்தளத்தில் இனி 3டி முறையில் மக்களை இணைக்க முடியும். இது சமூகவலைத்தளத்தின் 2வது அத்தியாயம் என மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மீது எவ்வளவு விமர்சனம் இருந்தாலும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications