உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கொண்டு வர்த்தகம் செய்து வரும் நிலையில் 2019-20ஆம் நிதியாண்டில் சுமார் 43 சதவீத அதிக வருமானத்தைப் பெற்று அசத்தியுள்ளது.
இதேபோல் இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் லாப அளவீடுகள் சுமார் 107 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
பேஸ்புக்-ன் லாபம் மற்றும் வருமானம்
மார்ச் 31, 2019 உடன் முடிந்த நிதியாண்டில் உலகின் முன்னணி சமுக வலைதள நிறுவனமான பேஸ்புக் கடந்த நிதியாண்டை விடவும் 43 சதவீதம் அதிகமாக 1,277.3 கோடி ரூபாய் வருவாய்-ம், லாபத்தில் 107 சதவீதம் அதிகரித்து இந்நிறுவனத்தின் லாபம் 135.7 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
மார்ச் 31, 2018 உடன் முடிந்த நிதியாண்டில் பேஸ்புக் இந்தியாவில் வெறும் 65.3 கோடி ரூபாய் மட்டுமே லாபமாக அடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கூகிள்-ன் லாபம் மற்றும் வருமானம்
இதேபோல் கூகிள் மார்ச் 31, 2019 உடன் முடிந்த நிதியாண்டில் தனது இந்திய வர்த்தகத்தின் மூலம் தனது வருவாய் 34.8 சதவீத உயர்வில் தனது வருவாய் 5,593.8 கோடி ரூபாயாகவும், லாபம் 23.9 சதவீத வளர்ச்சியில் 586.2 கோடி ரூபாயாகவும் பெற்றுள்ளது என அறிவித்துள்ளது.
பேஸ்புக் இந்தியா
பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய வாடிக்கையாளர்களின் விளம்பர சேவைக்கு non-exclusive reseller ஆக மட்டுமே பேஸ்புக் இந்தியா செயல்படுகிறது. இதோடு பேஸ்புக் இந்தியா, பேஸ்புக் நிறுவனத்திற்கு ஐடி/ ஐடிஸ், மார்கெட்டிங் மற்றும் இதர சேவைகளையும் அளிக்கிறது.
இந்திய அரசு
இதனிடையில் இந்தியாவில் வர்த்தகம் செய்யும் வெளிநாட்டு டிஜிட்டல் நிறுவனங்களின் டிஜிட்டல் விளம்பர சேவைக்குப் பெறும் வருமானத்திற்கு இந்திய அரசு 6 சதவீத equalisation tax விதிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் இந்த வரி விதிப்பு அமெரிக்க நிறுவனங்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்க அரசு வரி விதிக்க ஆலோசனை செய்து வருகிறது.
அமெரிக்க அரசு
இந்திய அரசு வெளிநாட்டு இண்டர்நெட் நிறுவனங்கள் இந்தியாவில் செய்யும் வர்த்தகம் மற்றும் சேவை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதித்த நிலையில் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு எதிராக வரி விதிக்கத் திட்டமிட்டு வருகிறது.
10 நாடுகள்
ஆஸ்திரியா, இத்தாலி, இந்தியா, பிரேசில், செக் குடியரசு, இந்தோனேசியா, பிரிட்டன், ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் மீது தற்போது அமெரிக்க அரசு வரி விதிக்க ஆலோசனை செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications