சர்வதேச வர்த்தகச் சந்தையில் முன்னணி நிறுவனங்களின் பெரும்பாலான நிறுவனத்தில் இந்தியர்கள் உயர் பதவியில் இருக்கும் போது சமூகவலைத்தள நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பெரும் பெரிய தடுமாற்றம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் ஷாதி.காம் நிறுவனத்தின் நிறுவனரான அனுபம் மிட்டல் டிவிட்டரில் டக்கரான பதிவை செய்துள்ளார், இந்தப் பதவி தற்போது உலகளவில் டிரெண்டாகியுள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா 2022 ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் வர்த்தகம், வருமானம் எனப் பல வகையில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. இதே வேளையில் டிவிட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வான பராக் அகர்வால் டிவிட்டரில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
ஷாதி.காம்
இதைத் தொடர்ந்து ஷாதி.காம் நிறுவனத்தின் நிறுவனரான அனுபம் மிட்டல் தனது டிவிட்டர் கணக்கில் மெட்டா பங்குகள் கடந்த 5 வருடத்தில் 45.26 சதவீதம் சரிந்து 100 டாலர் அளவீட்டை இழந்து 97.94 டாலர் வரையில் சரிந்துள்ள புகைப்படத்தைப் பதிவிட்டார். இந்தப் பதிவில் அனுபம் மிட்டல் பதிவிட்ட கருத்து டிரெண்டாகியுள்ளது
அனுபம் மிட்டல்
அனுபம் மிட்டல் தனது டிவிட்டரில் மெட்டா பங்குகள் கடந்த 5 வருடத்தில் 45 சதவீதம் சரிந்துள்ளது, கட்டாயம் அவர்களுக்கு இந்திய சிஇஓ தேவைப்படும் நிலை உருவாகியுள்ளது, இதேவேளையில் டிவிட்டர் பராக் அகர்வால் தற்போது இருக்கிறார். என டிவிட் செய்துள்ளார். அடுத்த டிவீட்டில் ஜூக்கர்பெர்க் நோட் செய்துகொள்ளுங்கள் எனவும் டிவிட் செய்துள்ளார்.
பார்சூன் 500
பார்சூன் 500 நிறுவனங்களின் வெற்றிகரமாக இயங்கும் பல நிறுவனத்தில் இந்தியர்கள் சிஇஓ-வாக அசத்தி வரும் நிலையில், மெட்டா நிறுவனம் மிகவும் மோசமான வகையில் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையை மாற்றக் கட்டாயம் ஒரு மாற்றம் தேவை எனக் கடந்த சில நாட்களாகவே கருத்து நிலவுகிறது.
மெட்டாவெர்ஸ் தோல்வி
இதற்கு முக்கியமான காரணம் மார்க் ஜூக்கர்பெர்க் 10 பில்லியன் டாலருக்கு அதிகமான தொகையை முதலீடு செய்து மெட்டாவெர்ஸ் தளத்தில் உருவாக்கிய திட்டங்கள் டெக் வல்லுனர்கள் மத்தியில் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதனால் நிர்வாகத்தை வேறொருவர் கையில் கொடுத்துவிட்டு மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் தளத்தை மட்டும் கவனிக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் கருத்து தெரிவித்தனர்
மெட்டா காலாண்டு முடிவுகள்
இதற்கு ஏற்றார் போல் பேஸ்புக்-ன் தாய் நிறுவனமான மெட்டா வெளியிட்டு உள்ள காலாண்டு முடிவுகளில் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சுமார் 27.7 பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தைப் பெற்றது, இது கடந்த நிதியாண்டின் 29 பில்லியன் டாலர் அளவீட்டை ஒப்பிடுகையில் சுமார் 4 சதவீதம் குறைவாகும்.
வருவாய் சரிவு
மெட்டா நிறுவனம் முதல் முறையாக ஜூன் காலாண்டில் வரலாற்றில் முதல் முறையாக 0.9 சதவீத வருவாய் சரிவைச் சந்தித்த மறக்க முடியாது, இதைத் தொடர்ந்து மீண்டும் செப்டம்பர் காலாண்டில் 4 சதவீத சரிவைப் பதிவு செய்துள்ளது.
மார்க் ஜூக்கர்பெர்க்
இந்தச் சரிவு அடுத்தக் காலாண்டுக்கும் தொடர அதிகளவிலான வாய்ப்புகள் இருக்கும் காரணத்தால் மார்க் ஜூக்கர்பெர்க் அனைத்து ஊழியர்களையும் 200 சதவீதம் முழு முயற்சி உடன் பணியாற்ற வேண்டும் இல்லையெனில் பணிநீக்கத்தில் இருந்து தப்ப முடியாது என அறிவித்துள்ளது.
லாபம்
செப்டம்பர் காலாண்டில் மெட்டா 4.40 பில்லியன் டாலர் லாபத்தைப் பெற்றுள்ள நிலையில், கடந்த ஆண்டு இதன் அளவு 9.19 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்காலாண்டில் மெட்டா பல ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தும், வர்த்தகத்தை மூடியும் உள்ளது கவனிக்க வேண்டியதாக உள்ளது.
இந்திய சிஇஓ
இந்த நிலையில் மெட்டா நிறுவனத்தின் வீழ்ச்சியைக் காப்பாற்றவும், சந்தையில் இருக்கும் போட்டியை சமாளிக்கவும் நிச்சயம் புதிய அதிகாரி வேண்டும். அது ஏன் இந்தியராகவும், பேஸ்புக்-ன் சக போட்டி நிறுவனமான டிவிட்டரின் முன்னாள் சிஇஓ பராக் அக்ரவால் ஆக இருக்கக் கூடாது..? உங்க கருத்தை கமெண்ட் பண்ணுங்க.


Click it and Unblock the Notifications