உலகின் முன்னணி டெக் மற்றும் சமுக வலைத்தள நிறுவனமான மெட்டா நிறுவனம் நவம்பர் 2022ல் 11,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும், மார்ச் 2023 இல் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
மார்ச் அறிவிப்புக்கு பின்பு 4000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த மெட்டா நிர்வாகம் மீதமுள்ள 6000 ஊழியர்களை மே மாதம் கடைசி வாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் கடந்த வாரம் வெளியானது. இந்த தகவலை 100க்கு 100 உண்மை என்பதை உறுதி செய்யும் வகையில் மெட்டா நிறுவனம் புதன்கிழமை பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மார்ச் 2023ல் 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டதில் கடைசி 6000 ஊழியர்களை மெட்டா நிர்வாகம் பிஸ்னஸ் மற்றும் ஆப்ரேஷன்ஸ் பிரிவில் அதிகளவில் செய்துள்ளது. இதை தாண்டி மார்கெட்டிங், சைட் செக்யூரிட்டி, என்டர்பிரைஸ் இன்ஜினியரிங், ப்ரோகிராம் மேனேஜ்மென்ட், கன்டென்ட் ஸ்டாட்டர்ஜி மற்றும் கார்பரேட் கம்யூனிகேஷன்ஸ் பிரிவிலும் தலா 10க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
இதோடு மெட்டா நிர்வாகம் தனது பல்வேறு சேவைகளின் privacy மற்றும் integrity-ஐ மேம்படுத்தும் பிரிவில் இருந்தும் அதிகப்படியான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் லின்கிடுஇன் தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

மெட்டா நிறுவனம் கடந்த 4 வருடத்தில் அதன் வர்த்தகம், வாடிக்கையாளர் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றால் மிகையில்லை. கொரோனா தொற்று காலத்தில் டிக்டாக், யூடியூப் ஷாட்ஸ் ஆதிக்கத்தால் பெரும் வாடிக்கையாளர் கூட்டத்தை இழந்தது பேஸ்புக்.
மெட்டா நிறுவனத்தின் கீழ் இருக்கும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தொடர்பான ரகசிய விபரங்களை அதன் ஊழியர் ஒருவர் வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதில் இருந்து தான் மெட்டாவின் நிலைமை மோசமானதாக மாறியது, அனைத்தையும் விட முக்கியமாக மார்க் ஜூக்கர்பெர்க் மெட்டாவெர்ஸ் தளத்தில் முதலீடு செய்த பெரும் தொகை வீனாது, டெக் வல்லுனர்கள் மத்தியில் மெட்டாவெர்ஸ் அதிகளவில் விமர்சனங்களை எதிர்கொண்டது.


Click it and Unblock the Notifications