மார்க் ஜூக்கர்பெர்க் தலைமை வகிக்கும் மெட்டா நிறுவனம் அடுத்தடுத்து பல பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது. ஒருபக்கம் வர்த்தகம், வாடிக்கையாளர்களை டிக்டிாக் மற்றும் யூடியூப்-யிடம் இழந்து வரும் மெட்டா, மறுபுறம் ஊழியர்களை அடுத்தடுத்துப் பணிநீக்கம் செய்து வருகிறது.
இது போதாது என்பது போல் மார்க் ஜூக்கர்பெர்க் முயற்சியில் உருவாக்கப்பட்டும் மெட்டவெர்ஸ் பிரிவில் செய்யப்பட்டு உள்ள முதலீடுகள் முதலீட்டாளர்களையும், டெக் வல்லுனர்களையும் கவரவில்லை.
இந்த நிலையில் பிரிட்டன் அரசு அமைப்பின் உத்தரவால் இரு வருடத்திற்கு முன்பு கைப்பற்றிய Giphy நிறுவனத்தை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா வாங்கிய அனிமேட்டெட் இமேஜ் தளமான Giphy-ஐ விற்பனை செய்யப் பிரிட்டன் போட்டித்தன்மை ஆணையம் அறிவித்துள்ளது. இதன் மூலம் மெட்டா மற்றும் Giphy 2020ல் செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்துச் செய்யப்பட்ட உள்ளது.
Giphy நிறுவனம்
பெரும்பாலான டிஜிட்டல் மற்றும் சமூகவலைத்தளத்தில் பயன்படுத்தும் GIF இமேஜ்-கள் Giphy நிறுவனத்துடையது தான். இந்த நிலையில் மெட்டா இந்நிறுவனத்தைக் கைப்பற்றினால் சந்தையில் சக போட்டி நிறுவனங்களைப் பாதிப்பது மட்டும் அல்லாமல் போட்டித்தன்மையைக் குறைத்து மொத்தமும் மோனோபோலியாக மாறும் நிலை உள்ளது.
பிரிட்டன்
இதை உணர்ந்த பிரிட்டன் நாட்டின் Competition and Markets Authority மெட்டா மற்றும் Giphy நிறுவனத்திற்கு மத்தியில் செய்யப்பட்ட 2020 ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய உத்தரவிட்டு உள்ளது. CMA அமைப்பின் உத்தரவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக மெட்டா செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளார்.
மெட்டா தோல்வி
விரைவில் Giphy நிறுவனத்தை மெட்டா தளத்தில் இருந்து தனியாகப் பிரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாகப் பிரிட்டன் அரசு அமைப்பு ஒரு அமெரிக்க நிறுவனம் கைப்பற்றிய நிறுவனத்தைத் திரும்ப விற்பனை செய்ய அறிவித்துள்ளது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications