மேக்அப் பொருட்களுக்கு இந்திய பெண்கள் மத்தியில் எப்போதும் மோகம் உண்டு, ஆனால் சமீபத்தில் ஆண்களும் முக தேற்றத்தை மேம்படுத்திக்கொள்ள அதிகளவிலான பொருட்களை வாங்குவதும் நாம் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். என்ன இருந்தாலும் பெண்களுக்கு இணையாக ஆண்கள் இன்னும் வளரவில்லை.
கொரோனா காலத்தில் அனைத்து வர்த்தக துறையும் சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்திய சந்தையில் கேக்அப் பொருட்களின் மீதான மோகம் குறையாமல் காலத்திற்கு ஏற்ற வகையில் பொருட்களை வாங்கி இத்துறையின் வர்த்தகத்தைக் காப்பாற்றியுள்ளனர் நம்ம ஊர் பெண்கள்.
அப்படி நம்ம ஊர் பெண்கள் என்ன பண்ணாங்க தெரியுமா..??
லிப்ஸ்டிக் வர்த்தகம்
இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்த போதும் இந்தியாவில் லிப்ஸ்டிக் விற்பனை மிகவும் சிற்பாகவும், தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வந்தது. ஆனால் இந்த கொரோனா வந்து லிப்ஸ்டிக் விற்பனையைக் குறைத்துவிட்டது.
ஏன் தெரியுமா..? பணம் இல்லாமல் மக்கள் வாங்க முடியாமல் இல்லை. சூப்பரான ஒரு காரணம் இருக்கு..!
லாக்டவுன்
லாக்டவுன் காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கின்றனர், விழா, ஹோட்டல், பார்க், பீச் என எதற்கும் போக முடியாது. அப்படி வெளியே போனாலும் மாஸ்க் அணிவது கட்டாயமாகியுள்ளது. மாஸ்க் அணிவது கட்டாயம் என்பதால் நம்ம ஊர் பெண்கள் ரொம்ப புத்திசாலித்தனமாக லிப்ஸ்டிக் வாங்குவது இல்லை.
இதற்கு மாறாக வேறு ஒரு மேக் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.
eye மேக்அப்
மாஸ்க் அணிவதால் லிப்ஸ்டிக் போடுவது தேவையற்றதாக மாறிவிட்ட நிலையில் தற்போது இந்திய பெண்கள் அனைவரும் கண் மற்றும் கண் சார்ந்த அலங்காரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இது இந்திய பெண்கள் மத்தியில் டிரெண்ட் ஆகவும் உள்ளது.
காஸ்மெடிக்ஸ்
லாக்டவுன் காலத்தில் கண் மற்றும் கண் சார்ந்த அலங்கார பொருட்களுக்கு மக்கள் மத்தியில் அதிகளவிலான தேவையும் மற்றும் விற்பனையும் அதிகரித்துள்ள நிலையில், காஸ்மெடிக்ஸ் நிறுவனங்கள் தற்போது லிப்ஸ்டிக்ஸ் மீதான கவனத்தைக் கண் அலங்கார பொருட்கள் மீது திரும்பியுள்ளனர்.
இதனால் அடுத்த சில வாரங்களில் அதிகளவிலான கண் அலங்கார பொருட்களான eyeliners, mascara மற்றும் eyeshadows ஆகிய சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவை
சொல்லப்போனால் லாக்டவுன்-க்கு பின் கண் அலங்கார பொருட்கள் இல்லை மாஸ்க்-இன் வர்த்தகம் தான் மிகப்பெரியதாக இருக்கும். ஏற்கனவே சந்தையில் பல விதமான மாஸ்க்-கள் வந்துவிட்ட நிலையில், கொரோனா-க்கு பின் ஹேண்டுபேக், ஷூ, வாட்ச் போல மாஸ்க்-ம் ஒரு accessoriesஆக இருக்கும்.
அதுவும் பெண்களுக்கு என பிரத்தியேகமாகப் பல வடிவங்களில், பல வண்ணங்களில், பல டிசைன்களில் வர உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications