PF டிரான்ஸ்ஃபரில் பிரச்சனையா? இனி இந்த காரணங்களுக்காக கோரிக்கை நிராகரிக்க கூடாது! EPFO அதிரடி!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதிய நிதிக்காக சேமித்து வருகின்றனர். இதற்கு முன்னர் PF பணம் எடுக்கும் செயல்முறையிலிருந்து ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறினால் EPF ட்ரான்ஸ்ஃபர் செய்யும் செயல்முறை வரை அனைத்தும் சற்று சிக்கலானதாக இருந்தது. ஆனால் தற்போது EPFO அமைப்பு எல்லாவற்றையும் டிஜிட்டல் மையமாக்கி அனைத்து செயல்முறைகளையும் எளிதாக்கியுள்ளது.

அந்த வகையில் தற்போது EPFO அமைப்பு மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. ஒரு சிலர் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து கொண்டே மற்றொரு நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருப்பார்கள். இதுபோன்ற சூழலில் பழைய நிறுவனத்தின் கடைசி வேலை நாளும் புதிதாக ஒரு நிறுவனத்தில் சேரும் வேலை நாளும் ஒன்றாக இருக்கும்.

PF டிரான்ஸ்ஃபரில் பிரச்சனையா? இனி இந்த காரணங்களுக்காக கோரிக்கை நிராகரிக்க கூடாது! EPFO அதிரடி!

இதனால் பழைய நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததாக பதிவாகி இருக்கும். இந்த சூழ்நிலையில் PF ட்ரான்ஸ்ஃபர் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும். நீண்ட காலமாக இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது.

ஆனால் தற்போது EPFO அமைப்பு இந்த காரணத்திற்காக இபிஎப் ட்ரான்ஸ்பரை நிராகரிக்கக் கூடாது என்று தெளிவுபடுத்தியுள்ளது. ஏனெனில் இது போன்ற பிழை தவிர்க்க முடியாத சூழ்நிலைகளின் போதும் ஏற்படலாம்.

2025-ஆம் ஆண்டின் மே 20-ஆம் தேதி EPFO அமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கையில் ஊழியர்களின் சேவை காலங்களில் பழைய நிறுவனத்தில் பணிபுரிந்த கடைசி நாளும் புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த நாளும் ஒன்றாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவை சில நேரங்களில் உண்மையான காரணங்களால் ஏற்படலாம். இதை காரணமாக வைத்து PF ட்ரான்ஸ்ஃபரை நிராகரிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

சேவை காலங்களில் ஏற்படும் ஓவர்லாப்பிங் என்றால் என்ன?: ஒரு ஊழியர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிவது போல EPFO அமைப்பில் பதியப்பட்டிருந்தால் அது ஓவர்லாப்பிங் என்று அழைக்கப்படும்.

பொதுவாக ஒரு நிறுவனத்தில் இருந்து வேறு நிறுவனத்திற்கு செல்லும் போது நோட்டீஸ் பீரியட் இருக்கும். அப்படி இருந்தால் மற்றொரு நிறுவனத்தில் பணி புரியும் தேதியும் நோட்டீஸ் பீரியடின் கடைசி தேதியும் ஒன்றாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. இப்படி இருப்பதை தான் ஓவர்லாப்பிங் சர்வீஸ் பீரியட் என்று கூறுவார்கள். இதனால் இன்று வரையில் பிஎஃப் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது.

இதனைச் சரி செய்வதற்காகத் தான் EPFO அமைப்பு இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் PF ட்ரான்ஸ்ஃபர் செயல்முறை இன்னும் எளிதாகும் வாய்ப்புள்ளது. அதுவும் ஓவர்லாப்பிங் பிரச்சினை இருக்கும்போது பிஎப் ட்ரான்ஸ்ஃபர் கோரிக்கையை நிராகரிக்க கூடாது என்பதற்காகத்தான் இந்த உத்தரவு.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+