சென்னை: மின் விநியோக நிறுவனங்கள் (DISCOM) வேண்டுமென்றே மின்வெட்டை ஏற்படுத்தினால் அல்லது சேவைகளை வழங்கத் தவறினால், பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த கட்டுரையில், மின் விநியோக நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு பெறுவதற்கான உங்கள் உரிமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றி பார்ப்போம்.
எப்போது இழப்பீடு கோரலாம்?: DISCOM என்று சொல்லப்படுகிற மின் விநியோக நிறுவனங்கள் வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டித்தால், நீங்கள் இழப்பீடு கோரலாம்.

சேவை தாமதம்: இணைப்பு, துண்டித்தல், மறு இணைப்பு, இணைப்பை மாற்றுதல், நுகர்வோர் வகை மற்றும் லோடு மாற்றம், பில்லிங், வோல்ட்டேஜ் மற்றும் பில் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்து, சேவைகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால், நீங்கள் இழப்பீடு கோரலாம்.
மின்சாரத் துறை அமைச்சகம் சமீபத்திய செய்திக்குறிப்பில், மேலே குறிப்பிடப்பட்ட எந்தவொரு தாமதமும், விநியோக நிறுவனம் செய்தால் நுகர்வோருக்கு இழப்பீடு வழங்குவதற்கு வழிவகுக்கும். 24/7 மின்சாரம் பெறுவது என்பது நுகர்வோரின் உரிமை ஆகும், மேலும் ஒரு விநியோக நிறுவனம் வேண்டுமென்றே மின்சாரத்தை துண்டித்தால், நுகர்வோருக்கு விநியோக நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோருவதற்கு உரிமை உண்டு என்று தெரிவித்துள்ளது.
நுகர்வோர் உரிமைகள் (Consumer Rights) விதிகள், 2020-இன் படி, மாநில மின்சார ஆணையம் நிர்ணயித்த நிபந்தனைகளின் அடிப்படையில் DISCOM நிறுவனங்கள் சேவை வழங்காவிட்டால், இழப்பீடு கோரலாம். இந்த நிபந்தனைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம். குறிப்பிடத்தக்க சில நிபந்தனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
1. மின்சார ஆணையம் நிர்ணயித்த எல்லைக்கு மேல் அதிக நேரம் மின்சாரம் தடைபடுவது.
2. மின் தடை ஏற்படுவது, இணைப்பு, துண்டிப்பு, மறு இணைப்பு, மின் இணைப்பை மாற்றுதல் போன்ற சேவைகளில் தாமதம்.
3. பழுதடைந்த மீட்டர்களை மாற்றுவதற்காக அதிக நேரம் எடுப்பது.
4. நுகர்வோர் வகை, மின் பயன்பாடு மாற்றம் போன்றவற்றில் தாமதம், புகார் தீர்வு போன்ற சேவைகளில் தாமதம் ஆகியவை இழப்பீடு கோர வழிவகுக்கும்.
5. பில் தொடர்பான புகார்கள்.
6. பில் கொடுக்க வேண்டிய நேரத்தை தாமதப்படுத்தி கொடுப்பது.
உங்கள் மாநிலத்தின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் இணையதளம் அல்லது விதிகளை பார்த்து, இழப்பீடு பெறுவதற்கான நிபந்தனைகளை துல்லியமாக தெரிந்து கொள்ளுங்கள்.
மின் விநியோக நிறுவனங்கள் குறிப்பிட்ட நேர வரம்பை மீறினால் அல்லது மின் தடை அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறினால், நுகர்வோருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் . இழப்பீடு மின் தடை ஏற்பட்ட நேரத்திற்கு ஏற்ப மணிக்கணக்கில் கணக்கிடப்படுகிறது. இது நுகர்வோரின் வகையைப் பொறுத்து மாறுபடும் என்று SKV சட்ட அலுவலகத்தின் மேலாண்மை பங்குதாரர் திரு. வெங்கடேஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications