இந்திய பில்லியனரான ரத்தன் டாடா உலகளவில் மதிக்கப்படும் ஒரு பெரும் தொழிலதிபர். டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடாவின் நிகர சொத்து மதிப்பு ரூ.3800 கோடி ஆகும். டாடா மோட்டார்ஸ் தயாரிக்கும் வாகனங்களின் தரத்திற்காகவே இப்போது பலர் டாடா கார்களை வாங்குகின்றனர்.
நடுத்தர மக்களுக்கு ஏற்ற வாகனங்களையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. குறிப்பாக இந்திய எலக்ட்ரிக் கார் சந்தையை கட்டியாளுகிறது டாடா மோட்டார்ஸ். டாடா சுமோ, டாடா இண்டிகோ, டாடா இண்டிகா, டாடா சியாரோ போன்றவை பிரபலமான கார் மாடல்கள் ஆகும்.

ரத்தன் டாடா சோசியல் மீடியாவில் மிகவும் பிஸியாக ஏதாவது ஒரு தத்துவம் அல்லது பதிவை பகிர்ந்து வருகிறார். இப்போது சோசியல் மீடியாவில் சில பதிவுகளில் இந்திய ராணுவத்துக்கு குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகள் துளைக்காத பேருந்துகளை அளித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவுகள் அனைத்தும் வைரலாகியுள்ளன.
அண்மையில் இந்திய ராணுவத்துக்கு ரத்தன் டாடாவின் டாடா மோட்டார்ஸ் குண்டுகள் மற்றும் வெடிகுண்டுகளால் துளைக்க முடியாத பேருந்துகளை வழங்கியுள்ளது என்று ஒரு பேஸ்புக் பயனாளர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி இன்டர்நெட்டில் வலம் வந்தபடி இருக்கும் நிலையில் இது ஒரு போலி தகவல் என தெரிய வந்துள்ளது.
அந்த குண்டு துளைக்காத பேருந்துகளுடன் ரத்தன் டாடா இருப்பது போன்ற படங்கள் எல்லாம் செயற்கையாக செய்தவை என்றும் கூறப்படுகிறது.
இப்படி வைரலாகி வரும் பதிவுகளில் இடம்பெற்றுள்ள பேருந்துகள் 2017 ஆம் ஆண்டில் சிஆர்பிஎப் துணை ராணுவப் படைக்கு வழங்கப்பட்டதாகும். இந்தப் பேருந்துகளின் பெயர் மிதானி. ஆனால் இந்த பேருந்துகளை டாடா பரிசாக வழங்கினார் எனக் கூற முடியாது.
இப்படி பகிரப்பட்டுள்ள பல பதிவுகளில் டாடாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இந்தப் பதிவில் தவறாகக் கூறப்பட்டுள்ளது என்றும் ரத்தன் டாடாவுக்கும் இந்தப் பதிவுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனப்படுகிறது.
இதுபோல பல போலி பதிவுகள் ரத்தன் டாடா தொடர்பாக வெளிவந்துள்ளன என்று டாடா குரூப் விளக்கம் தந்துள்ளது. சுவாரஸ்யத்துக்காகவும், மக்களின் கவனத்தை ஈர்க்கவும் இதுபோன்ற தவறான பிரசாரங்களை சில நெட்டிசன்கள் செய்கின்றனர்.
ஆனால் ரத்தன் டாடா இதுபோன்ற போலியான பதிவுகளையெல்லாம் சட்டை செய்வதில்லை. தனது கருத்துகளை அவர் சுதந்திரமாகவே பதிவிட்டு வருகிறார். இந்திய ராணுவத்துக்கு குண்டு துளைக்காத பேருந்துகளை பரிசாக ரத்தன் டாடா வழங்கினார் என்பது தான் செய்தியை காட்டுத் தீயாகப் பரவச் செய்துவிட்டது.


Click it and Unblock the Notifications