வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக செய்தி ஒன்று வாட்ஸ்அப், சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அது உண்மையா இல்லை பொய்யா என மக்கள் மத்தியில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது.
உண்மை என்ன..?
பிரதமர் மோடி
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இந்தியாவில் கருப்பு பணத்தை ஓழிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா முழுவதும் அதிகளவில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாயை பயன்படுத்த மொத்தமாக தடை செய்தது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய்
இந்த தடை உத்தரவுக்கு பின்பு மக்களிடம் இருக்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாயை புதிய ரூபாய் நோட்டுகள் உடன் மாற்றிக்கொள்ள கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசத்திற்குள் பெரும்பாலான மக்கள் தங்களுடைய பணத்தை மாற்றினாலும் சிலர் மாற்ற முடியாமல் வைத்துள்ளனர். இதில் என்ஆர்ஐ-களும் அடக்கம்.
என்ஆர்ஐ
இந்த நிலையில் தான் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தகவல் வெளியாகி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளியான புரளி!
பணமதிப்பிழப்பு செய்ததையடுத்து ரூபாய் நோட்டுகள் குறித்த பல புரளிகள் இணையத்தில் பரவி வந்த வண்ணம் உள்ளது. அதில் ஒன்றுதான் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளதாக செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிஐபி செக் (PIB fact check)
இந்த செய்தி வெளியானதையடுத்து இது போலியான செய்தி என்று பிஐபி ஃபேக்ட் செக் (Press Information Bureau -PIB) ஏஜென்சி அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
மேலும் இந்திய ரிசர்வ் வங்கியால் அத்தகைய உத்தரவு ஏதும் பிறக்கப்படவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளது. எனவே இதை யாரும் நம்ப வேண்டாம்.
ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு!
2016 ஆம் ஆண்டு பிரதமர் மோடி அரசின் தலைமையில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதித்து கருப்ப பணம் மொத்தமாக ஓழிக்கப்படும் என அறிவித்தது, ஆனால் கள நிலவரம் மாறிய காரணத்தால் இந்தியாவில் டிஜிட்டல் பொருளாதாரம் உருவாக்கும் முயற்சி என மாற்றப்பட்டது.
பல காரணம்
பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் மக்கள் அந்த பழைய ரூபாய் நோட்டுகளை புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளும் கால அவகாசத்தையும் மத்திய அரசு வழங்கியது. பல்வேறு காரணங்களுக்காக NRI-கள் மட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் சில பெரும் பணக்காரர்களும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் உள்ளனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications