ஓல்டு இஸ் கோல்டு என்பார்கள். இதனை மெய்யாக்கும் விதமாக சில நேரங்களில் பழைய நாணயங்கள், ரூபாய் தாள்கள் லட்சக்கணக்கில், ஆயிரக்கணக்கில் விலை போவது உண்டு.
பழைய நாணயங்களை சேமித்து வைக்கும் பழக்கம் சிலருக்கு பொழுதுபோக்காக இருக்கலாம். சிலருக்கு இதுவே வணிகமாகவும் இருக்கலாம்.
இதுபற்றி ஏற்கனவே பலமுறை குட் ரிட்டர்ன் தளத்தில் எழுதியுள்ளோம். பழைய அரிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று. சில அரியவகை நாணயங்களுக்கு லட்சக் கணக்கில் கூட கிடைக்கலாம் என பார்த்தோம். எனினும் இந்த பழைய நாணயங்கள், நோட்டுகள் சில முக்கிய அம்சங்கள் இருக்க வேண்டும் என்று ஏலமிடும் நிறுவனங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
OLXல் விற்கலாம்
உங்களது பழைய நாணயங்களை ஓஎல்எக்ஸ் (OLX) ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்றுக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் Olx.com தளத்தில் சென்று பதிவு செய்ய வேண்டும். அதன் பின்னர் உங்களிடம் இருக்கும் 50 பைசா நாணயத்தினையோ அல்லது வேறு எந்த பழைய நாணயமாகவோ போட்டோ எடுத்து பதிவு செய்ய வேண்டும்.
இந்தியாமார்ட் பதிவு செய்யலாம்
உங்களது நாணயம் யாருக்கு தேவையோ, அவர்கள் உங்களது பதிவு எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். இதே போல இந்தியாமார்ட் தளத்திலும் உங்களது பழைய நாணயங்களை ஏலத்தில் விடலாம். அங்கு உங்களிடம் இருக்கும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் தாள்களுக்கு தேவை இருப்பின், வாடிக்கையாளர்கள் உங்களை தொடர்பு கொள்ளலாம்.
காயின்பஜாரில் பதிவேற்றம் செய்யலாம்
இதேபோல காயின்பஜார் தளத்தில் பழைய 1 ரூபாய் தாள், 2 ரூபாய் தாள், 5 ரூபாய் தாள் என ஆயிரக்கணக்கில் விலை போகலாம். எனினும் இதற்காக இந்த பழைய நாணயங்களை வாங்குபவர்கள் சில கண்டிசன்களையும் வைத்துள்ளனர். ஆக அந்த கண்டிசன்கள் இருக்கும்பட்சத்தில் உங்களது நாணயங்கள் மற்றும் ரூபாய் தாள்கள் தேவைக்கு ஏற்ப விலை போகலாம்.
முக்கிய அம்சங்கள்
இதில் மிக பிரபலமானது 786 என்ற தொடர் எண் கொண்ட தாள்களாகும். இது மிக மங்களகரமான தாள்களாக பார்க்கப்படுகின்றது. இது செழிப்பின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இதே போல மாத வைஷ்ணவ தேவியின் படம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களுக்கு தேவை இருப்பதாகவும், இந்த நாணயங்கள் 2002ல் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டது. இதற்காக பல ஆயிரங்கள் கொடுக்க ஆர்வலர்கள் தயாராக உள்ளனர்.
கையொப்பம் வேண்டும்
1977 - 1979 வருடத்தில் வெளியிடப்பட்ட 1 ரூபாய் பழைய தாள், 45,000 ரூபாய் வரையில் விலை போகலாம் என கூறப்படுகிறது. இந்த தாளில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் கீழ் பதவி வகுத்த முன்னாள் முதன்மை செயலாளர் ஹிருபாய் எம் படேலின் கையொப்பம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
லட்சக்கணக்கில் விலை போகுமா?
எனினும் இந்த நாணயங்கள் லட்சக் கணக்கில் விலைபோவது என்பது சாத்தியமானது அல்ல. அவை சில ஆயிரங்களுக்கு விலை போகலாம். சில குறிப்பிட்ட நாணயங்கள் 45,000 ரூபாய் வரையில் விலை போகின்றன. எனினும் நாணயங்களை வாங்குபவர்கள் கேட்கும் நிபந்தனைகள் இருக்கும்பட்சத்தில் தான், அந்த விலை கொடுக்கப்படுகின்றது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?



Click it and Unblock the Notifications