நிதி அமைச்சகம் ஒவ்வொரு குடிமகனுக்கும் ரூ.30,628 நிதியுதவியாக வழங்குகிறது என சமூக வலைத்தளங்களில் செய்தி ஒன்று கடந்த சில நாட்களாக வைரல் ஆகி வருகிறது. அதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நிதியமைச்சகம் 30,628 ரூபாய் நிதியுதவியாக வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் அனுபவிக்கும் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, நெருக்கடியின் தீவிரத்தைக் குறைக்க, ஒவ்வொரு குடிமகனுக்கும் (ரூ.30,628) வழங்க நிதி அமைச்சகம் முடிவு செய்துள்ளது" என்று ஒரு இணையதளத்தில் போலி தகவல் வெளியாகியுள்ளது.
உஷார்
மேலும் அந்த போலி இணையதளத்தில், இந்த நிதி உதவியைப் பெறக் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பை கிளிக் செய்து பதிவு செய்யவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிஐபி
"இந்த போலி தகவல் குறித்து டிவிட்டரில் தெரிவித்துள்ள பிஐபி, இது போல நிதியமைச்சகம் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை" என உறுதி செய்துள்ளது.
போலி தகவல்கள் உறுதி செய்வது எப்படி?
இதுபோன்ற தகவல்களை சமூக வலைத்தளங்கள் அல்லது மெசேஜ் மூலம் பெற்றால், அதை உடனே https://factcheck.pib.gov.in என்ற இணைப்பிற்கு அனுப்பி உறுதி செய்யவும்.
புகார் அளிக்க எண்கள்
மேலும் +91-8799711259 வாட்ஸ்அப் எண் அல்லது pibfactcheck@gmail.com மின்னஞ்சலுக்கு இது போன்ற தகவல்களை அனுப்பியும் உறுதி செய்யலாம் என இந்திய பத்திரிக்கை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Whatsapp-ல் வலை விரிக்கும் மோசடி கும்பல்
ஆன்லைன் மோசடி செய்பவர்கள், தற்போது லாட்டரி ஜெயித்து இருப்பதாகச் சொல்லி, ஒரு எண்ணைக் கொடுத்து அழைக்கச் சொல்கிறார்கள். அதன் பிறகு அழைத்து பேசி, வங்கி விவரங்களை எல்லாம் தெரிந்து கொண்டு மோசடி செய்கிறார்கள். இது குறித்து சில நாட்கள் முன்பு, எஸ்பிஐ தன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், தன் வாடிக்கையாளர்களை எச்சரித்து இருக்கிறது.
மோசடிக்காரர்கள் காத்திருக்கிறார்கள்
ஆன்லைனில் பணத்தைப் பறிக்கும் மோசடிதாரர்கள், நாம் தவறு செய்யக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். போலியாக, வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் கால்களையோ, வாடிக்கையாளர்களுக்கு வரும் போலி எஸ் எம் எஸ்-களையோ நம்ப வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறது பாரத ஸ்டேட் வங்கி.


Click it and Unblock the Notifications