2016 ஆம் ஆண்டு மோடி அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன் பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இனி பேப்பர் நோட்டுகளுக்கு பதிலாக பாலிமர் என்ற பிளாஸ்டிக் நோட்டை கொண்டுவர பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். ஆனால் இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆர்பிஐ தரப்பிலிருந்து வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் ஜூன் 30-ம் தேதி முதல் பேப்பரால் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மெசேஜ் சோசியல் மீடியா தளங்களில் பரவி வருகிறது. இது உண்மையா என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஜூன் 30-ஆம் தேதி முதல் இந்தியாவில் நாம் பயன்படுத்தி வரும் காகித ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும், அதற்கு பதிலாக ஆர்பிஐ பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் என்றும் சமூக ஊடகத் தளங்களில் சில தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் பிரஸ் இன்பர்மேஷன் பியுரியோ (PIB) இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்று கூறி மறுத்துள்ளது. PIB என்பது அரசு செய்தி நிறுவனம்.

ஜூன் 30க்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்து பேப்பர் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான எந்த திட்டமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் PIB தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்பதற்காக பிஐபி தங்களுடைய அதிகாரப்பூர்வ X தளத்தில் ஒரு போஸ்டையும் பதிவிட்டிருக்கிறது. அதில், "ரிசர்வ் வங்கியின் தகவல் படி, 2026-ஆம் ஆண்டு ஜூன் 30-க்குள் பேப்பர் ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதற்கான எந்த திட்டமும் இல்லை. மக்கள் யாரும் இந்த செய்திகளை பார்த்து கவலை அடைய வேண்டாம்", என்று தெரிவித்துள்ளது.
தற்போது வரையில் ஆர்பிஐ பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிராக்டிக்கலாக யோசித்தால் ஜூன் 30-ம் தேதி வர இன்னும் 20 நாட்களே இருக்கிறது. இதில் எப்படி இவ்வளவு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியும். எனவே பொதுமக்கள் அதிகாரப்பூர்வ செய்தியின் வாயிலாக கிடைக்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும். அதேபோல தவறான தகவல்களுடன் மக்களை திசை திருப்பும் பதிவுகளை பரப்புவதோ அல்லது பகிர்வதோ கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆர்பிஐ இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தால், கண்டிப்பாக அது அதிகாரப்பூர்வ செய்தித்தாள்கள் வழியாக வெளியாகி இருக்கும்.


Click it and Unblock the Notifications