உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22 ஆம் தேதியன்று புதிய ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி இந்தக் கோயிலை திறந்து வைக்கிறார். திறப்பு விழாவுக்கு முன்பாக ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து ஆகம வேள்விகள் தொடங்கும்.
ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ் இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது. ஜனவரி 22 ஆம் தேதியன்று ராமர் கோயிலில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த விழாவில் லட்சக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் வந்து தங்கியிருக்க வசதியாக அயோத்தியில் பல இடங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு புனித சரயு நதியில் நீர்வழி மெட்ரோ போக்குவரத்து தொடங்குகிறது. அயோத்தியின் முக்கியப் பகுதிகளை இந்த நீர்வழி மெட்ரோ இணைக்கின்றது.
முன்னதாக அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும், புதிதாக சீரமைக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும் பிரதமர் நரேந்தி மோடி திறந்து வைத்தார். புதிய ராமர் கோயில் திறப்பு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாபா ராம்தேவ், முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, உள்பட 3000க்கும் மேற்பட்ட விவிஐபிகள் பங்கேற்க உள்ளனர்.
இந்த நிலையில் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியும் அவரது மனைவி நீதா அம்பானியும் ராமர் கோயிலுக்கு 3 தங்க கிரீடங்களை நன்கொடையாகத் தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த கிரீடங்களின் மொத்த எடை 33 கிலோ என இந்தத் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகியுள்ளது. இதற்காக அம்பானியின் குடும்பத்துக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
முகேஷ் அம்பானி அளித்த 33 கிலோ தங்க கிரீடங்கள் குறித்து ஸ்ரீ ராமர் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட்டிடம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை முகேஷ் அம்பானி, நீதா அம்பானி தந்ததாகக் கூறப்படும் தங்க கிரீடங்கள் பற்றி அதிகாரப்பூர்வகமாக உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக முகேஷ் அம்பானி குடும்பத்தில் இருந்து எந்தவித தகவல் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனிடையே கோயிலுக்கு நன்கொடை தந்தவர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி, நீததா அம்பானியின் பெயர்கள் இடம் பெறவில்லை எனக் கூறப்படுகிறது. புதிய ராமர் கோயிலுக்கு உலகெங்கும் இருந்து ஏராளமான நன்கொடைகள் குவந்த வண்ணம் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications