மோடி அரசின் பணமதிப்பிழப்புக்குப் பின்பு மக்கள் மத்தியில் அதிகம் பரவிய செய்தி ரூபாய் நோட்டில் எழுதினால் அது செல்லாது என்பது தான். இதற்கான விளக்கம் வெளியிடப்படவில்லை என்பதால் தொடர்ந்து பல செய்திகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற டிஜிட்டல் தளத்தில் அதிகளவில் பரவி வந்தது.
இந்த நிலையில் பல மோடி அரசு தற்போது இதற்கான விளக்கத்தை அளித்துப் பல ஆண்டுகளாக வளம் வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் இந்திய ரூபாய் நோட்டுகள் ஏதாவது எழுதப்பட்ட செல்லாதா..?
வாட்ஸ்அப் வதந்தி
இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) வழிகாட்டுதலின்படி, ரூபாய் நோட்டில் எழுதினால் ரூபாய் நோட்டுச் சிதைக்கப்பட்டதாகக் கருதி அது செல்லாதா அறிவிக்கப்படும் என்ற செய்து வாட்ஸ்அப் ஃபார்வர்ட் மூலம் இந்தியா முழுக்க வைரலானது.
அரசு விளக்கம்.. வதந்தி பொய்யானது
இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இதற்கு PIB FACT CHECK டிவிட்டர் கணக்கில் விளக்கம் அளித்துள்ளது. இந்திய ரூபாய் நோட்டுகள் ஏதாவது எழுதப்பட்ட செல்லாது எனச் செய்தி கூற்று தவறானது எனத் தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் எழுதினாலும் அது செல்லும் என விளக்கம் கொடுக்கப்பட்டு உள்ளது.
அரசு வேண்டுகோள்
ஆனாலும் இந்தியாவின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி அதன் சுத்தமான ரூபாய் நோட்டு கொள்கையின் ஒரு பகுதியாக, ரூபாய் நோட்டில் எழுதவோ அல்லது எழுதி அதன் பயன்பாட்டுக் காலத்தைக் குறைக்க வேண்டாம் என்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விளக்கத்தை டிவிட்டரில் தற்போது இந்திய அரசின் தகவல் பிரிவான பிரஸ் இன்பர்மேஷன் பீரோ தெளிவுபடுத்தியுள்ளது.
புதிய விதிமுறைகள்
மேலும், இந்திய ரூபாய் நோட்டுகள் எழுதப்படுவது குறித்து ரிசர்வ் வங்கியிடமிருந்து புதிய விதிமுறைகள் எதுவும் அறிவிக்கவும் இல்லை, நடைமுறைப்படுத்தவும் இல்லை. இந்திய குடிமக்களுக்கு நல்ல தரமான கரன்சி நோட்டுகள் மற்றும் நாணயங்களை வழங்குவதற்கும், படிப்படியாக அழுக்கடைந்த நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து வெளியேற்றும் நோக்கத்துடன் 1999 இல் ரிசர்வ் வங்கி ஒரு Clean Note Policy வெளியிட்டது, இது இப்போதும் நடைமுறையில் உள்ளது.
Clean Note கொள்கை 1999
இந்தச் சுத்தமான நோட்டுக் கொள்கையின் கீழ், 1999 ஆம் ஆண்டு முதல் கரன்சி நோட்டுகளைக் கெடுக்கும் வகையில், அவற்றின் பயன்பாட்டு ஆயுத் காலத்தைக் குறைக்கும் என்பதால், அதில் எழுத வேண்டாம் என்று மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று PIB கூடுதல் விளக்கம் கொடுத்துள்ளது.
நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள்
இந்திய ரிசர்வ் வங்கி தான் இந்தியாவில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதற்கான அதிகாரம் கொண்டே ஓரே அமைப்பு. அரசின் பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கும், வங்கிகள் மற்றும் பொதுமக்களின் பரிமாற்றம் மற்றும் பணம் அனுப்புதல் தேவைகளுக்கும் போதுமான நாணய விநியோகத்தை உறுதி செய்யும் முக்கியமான பொறுப்பை மத்திய வங்கி கொண்டுள்ளது.
அதிர்ச்சி
ரூபாய் நோட்டில் காதலை வெளிப்படுத்தும் மக்களுக்கு இதுபோன்ற அறிவிப்புகள் அதிர்ச்சி அளித்தாலும், இதுதான் சரியான வழக்கம். நாணயங்களை அச்சிடுவதில் மட்டுமே அரசு பெரும் தொகையைச் செலவு செய்கிறது, இதைக் கட்டுப்படுத்தவும், ரூபாய் நோட்டுக்கான மரியாதையைக் கொடுக்கவும் இதைக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.


Click it and Unblock the Notifications