மார்ச் மாதம் இந்தியாவில் தொழிற்துறை உற்பத்தி அளவீடு கடந்த 7 மாதத்தில் மிகவும் குறைவான நிலையை அடைந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலையில் அதிகளவிலான பாதிப்பு அடைந்து வரும் நிலையில், நாட்டின் பல பகுதிகளில் புதிதாக லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் வர்த்தகச் சந்தையில் பொருட்களின் தேவையும் குறைந்துள்ளது, உற்பத்தியும் குறைந்துள்ளது. இதன் வாயிலாகச் சிறு, குறு தொழிற்சாலைகளில் ஆட்குறைப்பு துவங்கியுள்ளது.
2வது கொரோனா அலை
இந்தியாவில் 2வது கொரோனா அலை பெரிய அளவில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும், தொற்றைக் கட்டுப்படுத்த அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதிக்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலங்கள் விதித்து வரும் கட்டுப்பாடுகள் அனைத்தும் ஏப்ரல் மாதம் வரை முழுமையாகத் தொடரும்.
பிஎம்ஐ குறியீடு அளவுகள்
இந்நிலையில் IHS மார்கிட் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி மார்ச் மாதத்தில் இந்தியாவின் பிஎம்ஐ குறியீடு 55.4 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. பிப்ரவரி மாதம் இதன் அளவீடு 57.5 புள்ளிகளாகச் சரிவடைந்துள்ளது.
7 மாத சரிவு
2020 ஜூலை மாத சரிவுக்குப் பின் தொடர்ந்து 7 மாதம் அதாவது பிப்ரவரி மாதம் வரையில் நாட்டின் தொழிற்துறை உற்பத்தி மிகவும் சிறப்பாக இருந்த நிலையில், தற்போது 2வது கொரோனா அலையின் காரணமாகச் சரிவடைந்துள்ளது.
வெளிநாட்டு ஆர்டர்கள்
மார்ச் மாத காலகட்டத்தில் இந்திய நிறுவனங்கள் அதிகளவிலான வெளிநாட்டு ஆர்டர்களைப் பெற்று இருந்தாலும், கொரோனா தொற்று மற்றும் மந்தமான உள்நாட்டுத் தேவை மற்றும் உற்பத்தி அளவீடுகள் ஆகியவற்றின் காரணமாகப் பிஎம்ஐ குறியீடு சரிவடைந்துள்ளது.
ஏப்ரல் மாதத்திலும் தொடரும் மந்த நிலை
மேலும் மகாராஷ்டிரா உட்பட மாநில மாநிலங்களில் பகுதி பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ள லாக்டவுன் கட்டுப்பாடுகள் மூலம் ஏப்ரல் மாதம் நாட்டின் உற்பத்தி அளவீடுகள் அதிகளவில் அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் 5 மாநில தேர்தலும், ஆட்சி மாற்றம் குறித்த அதிர்வுகளும் நாட்டின் வர்த்தக வளர்ச்சியை மந்தமாக்கலாம்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications