கடந்த சில மாதங்களாகவே சரிவைக் கண்டிருந்த நிலையில் முதல் முறையாக ஆட்டோமொபைல் துறைக்கு ஒரு நல்ல செய்தி கிடைத்துள்ளது.
அப்படி என்ன நல்ல செய்தி என்று கேட்கிறீர்களா? கடந்த அக்டோபர் மாதத்தில் விழாக்கால பருவத்தில் பயணிகள் வாகன விற்பனை, முந்தைய ஆண்டை விட 11 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக ஃபெடரேஷன் ஆஃப் ஆட்டோமொபைல் டீலர்ஸ் அசோசியேஷன் (FADA) தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் 2,48,036 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் ஃபடா தெரிவித்துள்ளது.

இந்த விற்பனையானது கடந்த நவராத்திரி மற்றும் தீபாவளி நாட்களில் அளிக்கப்பட்ட தள்ளுபடிகள் காரணமாக இந்த விற்பனை ஏற்றம் கண்டுள்ளதாகவும் ஃபடா தெரிவித்துள்ளது. எனினும் கடந்த செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனையானது 2,23,498 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் ஃபடா கூறியுள்ளது. கடந்த திருவிழா காலங்களில் அனைத்து டீலர்ஷிப்களில் மிகச் சிறந்த முன்னேற்றங்களை கண்டது.
இது இரு சக்கர வாகன விற்பனை பிரிவில், சில்லறை விற்பனை கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 5 சதவிகிதம் அதிகரித்து, 1,334,941 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இதே மூன்று சக்கர வாகன விற்பனையானது 4 சதவிகிதம் அதிகரித்து 59,573 வாகனங்களாக அதிகரித்துள்ளது.

நிலவி வரும் ஓட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் சரிவால் கனரக வாகன விற்பனையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 23 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 67,060 வாகனங்களாக சரிவு கண்டுள்ளது.
கடந்த மாதத்தில் சில்லறை விற்பனையானது கடந்த மாதத்தில் 1 சதவிகிதம் அதிகரித்து, 3,43,319 வாகனங்களாக அதிகரித்துள்ளது. இதே மோட்டார் சைக்கிள் வாகன விற்பனையானது 2 சதவிகிதம் அதிகரித்து, 1,899,032 வாகனங்களாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே வர்த்தக வாகனங்கள் விற்பனை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
FADA நடத்திய ஒரு கணக்கெடுப்பின் படி, டீலர்ஷிப்களில் பயணிகள் வாகன சரக்கு இருப்பானது 25 -30 நாட்களில் சரிந்ததாகவும், இது முந்தைய மாதத்தில் 30 - 35 நாட்களில் குறைந்தது. இதே இரு சக்கர வாகன இருப்பானது 35 - 40 நாட்களில் குறைந்ததாகவும், இதே செப்டம்பர் மாதத்தில் 60 - 65 நாட்களில் இருப்பு குறைந்ததாகவும் கூறப்படுகிறது. இதே வர்த்தக வாகன விற்பனையானது 40 - 45 நாட்களில் இருப்பில் சரிந்ததாகவும், இது செப்டம்பர் மாதத்தில் 60 - 65 நாட்களில் சரிவடைந்ததாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications