சமீபகாலமாக மக்களை ஏமாற்றி விளம்பரம் செய்யும் போக்கு அதிகரித்துவிட்டன. இந்நிலையில் ஏமாற்றும் விளம்பரங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் விதமாக டெல்லி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் "இமாமி" நிறுவனத்திற்கு எதிராக ரூ.15 லட்சம் அபராதம் விதித்துள்ளது. நிறுவனத்தின் "ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் க்ரீம்" விளம்பரம் தவறாக வழி நடத்துவதாகவும், மக்களை ஏமாற்றுவதாகவும் எழுந்த புகாரை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2013-ஆம் ஆண்டில் ரூ.79 கொடுத்து இந்த க்ரீமை வாங்கிய புகார்தாரர், வாக்குறுதி அளிக்கப்பட்டபடி தனக்கு வெள்ளை நிற தோல் கிடைக்கவில்லை என்று கூறி புகார் அளித்தார். புகார்தாரரின் கூற்றுப்படி, பேக்கேஜிங்-இன் லேபிளில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் படி இந்த கிரீமை தவறாமல் முகத்தை சுத்தம் செய்த பிறகு 2 முறை பயன்படுத்தியுள்ளார். அப்படி பயன்படுத்தியும் எந்தவித மாற்றமும் அவருடைய தோலில் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதேபோல இமாமி லிமிடெட் கூற்றுப்படி, புகார்தாரர் தான் எவ்வாறு க்ரீமை பயன்படுத்தினார் என்பதை நிரூபிக்கவில்லை என்றும், எனவே தயாரிப்பு குறைபாடுடையது கிடையாது என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தது. புகார்தாரர் இந்த கிரீமை பயன்படுத்திய பிறகு அவருடைய சருமம் எப்படி இருக்கிறது என்பது தொடர்பான ஆதாரம் இல்லை என்றும் கூறியது.
தனிப்பட்ட பராமரிப்பு என்று வரும்போது கிரீமை பயன்படுத்துவதோடு சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள், உடற்பயிற்சி, ஆரோக்கிய பழக்க வழக்கங்கள், சுகாதாரமான வாழ்க்கை போன்ற பல காரணிகள் தேவை என்றும் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எழுத்துப்பூர்வ அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
எனவே இது போன்ற எந்த விஷயங்களும் பேக்கேஜிங்கில் குறிப்பிடப்படவில்லை. 16 முதல் 35 வயதுடைய இளைஞர்களுக்காக இந்த தயாரிப்பு கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நோய்வாய்ப்பட்டவர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் நோய்வாய்ப்பட்டவர்கள் என்றால் யார் யார் அடங்குவர்? என்ற விவரங்களும் இல்லை என்று நீதிமன்றம் கூறியது. அதோடு இமாமி லிமிடெட் புகார்தாரரை பேக்கேஜிங்-இன் அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்று கூறை கூற முடியாது என்றும் தீர்ப்பளித்தது.
நடந்த சம்பவத்திற்கு 2013-ஆம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. எனவே நிறுவனத்தின் நியாயமற்ற வர்த்தக நடைமுறையை நிறுத்தவும், திரும்பப் பெறவும் அறிவுறுத்தப்பட்டது. அதோடு பேக்கேஜ்கள், லேபிள்கள், விளம்பரங்கள் போன்றவற்றைக் கொண்டு காட்சிப்படுத்தக் கூடாது என்றும், ரூ14.50 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தொகையை டெல்லி மாநில நுகர்வோர் நிதியில் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. மேலும் புகார்தாரருக்கு இழப்பீடாக ரூ.50,000 மற்றும் வழக்குச் செலவாக 10,000 ரூபாய் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தது.


Click it and Unblock the Notifications