எச்சரிக்கையா இருங்க.. இந்த நிறுவனங்களை நம்பாதீங்க.. SBI alert..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

எஸ்பிஐ ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களின் பெயர்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து, SBI வாடிக்கையாளர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களை ஏமாற்ற, இந்த நிறுவனங்கள் போலியாக கடன்களை வழங்குவதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

இது மோசடி

இது மோசடி

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ லோன் ஃபைனான்ஸ் லிமிடெட் அல்லது இதுபோன்ற ஏதேனும் நிறுவனங்கள் உங்களைத் தொடர்பு கொண்டால், அதனை கவனத்தில் கொள்ளுங்கள். இவை எஸ்பிஐ உடன் தொடர்புடையவை அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இது வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களது பணத்தை மோசடி செய்ய, அவர்கள் போலி கடன் சலுகைகளை வழங்குகிறார்கள் என்று எஸ்பிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

எந்த தொடர்பும் இல்லை

எந்த தொடர்பும் இல்லை

மேலும் எஸ்பிஐ லோன் ஃபைனான்ஸ் லிமிடெட் பெயரிலும், அதுபோன்ற மற்ற நிறுவனங்களின் பெயர்களிலும் கடன் வழங்குவதாகக் கூறி சில நபர்களும் நிறுவனங்களும், பொது மக்களை ஏமாற்ற முயற்சிப்பது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதோடு இதுபோன்ற எந்தவொரு நிறுவனங்களுக்கும் எஸ்பிஐக்கு எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ளது.

யாருக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை
 

யாருக்கும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை

அதோடு அவ்வாறு கடன் வழங்குவதற்காக எந்தவொரு அங்கீகாரமும் எவருக்கும் வழங்கப்படவில்லை. ஆக எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது. கக் கோரும் நபர்கள் தங்கள் பெயரை பயன்படுத்த அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் SBI கூறியுள்ளது.

வங்கியை அணுகுங்கள்

வங்கியை அணுகுங்கள்

அப்படியே உங்களுக்கு லோன் தேவை எனினும், அருகிலுள்ள வங்கியை அணுகுங்கள் என பரிந்துரைத்துள்ளது. வங்கி மேலும் இடைத்தரர்களை ஊக்குவிக்காது என்றும் அறிவித்துள்ளது. நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் டிஜிட்டக் தளங்கள் மூலம் வழங்கப்படும் கடனுக்கு எதிரான எச்சரிக்கை விடுத்திருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Fake loan offers.. SBI alert against these companies

SBI updates.. Fake loan offers.. SBI alert against these companies
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X