இந்திய பொருளாதாரம் 2020 - 21 நிதி ஆண்டுக்கான, முதல் காலாண்டில், (ஏப்ரல் - ஜூன் 2020) 23.9 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு இருக்கிறது.
கடந்த ஜூன் 2020 காலத்தில், சீனாவின் தாக்குதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
சீனாவின் இந்த நடவடிக்கைக்குப் பின், இந்திய அரசு, பல வகைகளிலும் சீன புறக்கணிப்பை வெளிப்படுத்தத் தொடங்கியது. முதல் கட்டமாக நெடுஞ்சாலை ஒப்பந்தங்கள் தொடங்கி இந்திய ரயில்வே ஒப்பந்தங்கள் வரை சீனாவுக்கு கொடுக்கமாட்டோம் என்றது மத்திய அரசு.
சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள்
இதன் தொடர்ச்சியாக, சீனாவில் இருந்து, இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் மின்சார உபகரணங்களுக்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும் என்றது. முதல் கட்டமாக 59 சீன செயலிகளுக்கு தடை விதித்தது இந்தியா. அதனைத் தொடர்ந்து சீனாவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சோலார் பேனல்கள் மற்றும் சோலார் மின் உபகரணங்கள் மீது கூடுதல் வரியை விதித்தது.
118 சீன அப்ளிகேஷன்களுக்குத் தடை
சமீபத்தில், Baidu, Baidu Express Edition, FaceU - Inspire your Beauty, CamCard - Business Card Reader, CamCard Business, CamCard for Salesforce, CamOCR, PUBG MOBILE Nordic Map: Livik, PUBG MOBILE LITE என 118 சீன செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு.
அமர்த்தியா சென்
1998-ம் ஆண்டு நோபல் பரிசு வென்ற இந்திய பொருளாதார மேதை மற்றும் பேராசிரியர் அமர்த்தியா சென் "PUBG செயலியை தடை செய்ததால் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடையும்" எனச் சொன்னதாக, பொய் செய்திகள் சமூக வலை தளங்களில் உலவிக் கொண்டு இருக்கின்றன. இதை க்விண்ட் பத்திரிகை, பொய் என அவரின் மகளிடம் விளக்கம் கேட்டு நிரூபித்து இருக்கிறது.
அந்தரா தேவ் சென் (Antara Dev sen) விளக்கம்
அமர்த்தியா சென் "PUBG செயலியை தடை செய்ததால் இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடையும்" என்பதைப் போல எதையும் சொல்லவில்லை. இது புனையப்பட்டவை (Fabricated) என க்விண்ட் பத்திரிகையிடம் விளக்கம் கொடுத்து இருக்கிறார், அமர்த்தியா சென் அவர்களின் மகள் அந்தரா தேவ் சென்.


Click it and Unblock the Notifications