இன்றைய இளைஞர்கள் பல்வேறு காரணங்களால் திருமணம் செய்ய பல சிக்கல்களை சந்திக்கின்றனர். அதிகமான கல்வி செலவுகள், வேலைவாய்ப்பு தேடல், தனிப்பட்ட விருப்பங்கள் மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றன. இவ்வாறான சூழலில், குடும்பத்தினரும் பல கவலைகளை சந்திக்கின்றனர். குடும்பத்தினர் பெரும்பாலும் பாரம்பரிய உறவுகள், குடும்ப வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டு இளைஞர்களை திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர். ஆனால், இளைஞர்கள் சிலர் வாழ்க்கையின் தனிமையை உணர்ந்து, திருமணம் செய்ய தயக்கம் காட்டுகின்றனர். இதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வருகிறது.
இந்த சூழலில் தான், இந்தியாவில் இளம் தலைமுறை Gen Z, பழமையான திருமண மரபுகளை மாற்றி ஒரு புதிய பார்ட்டி கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். அதுதான் போலி திருமண விழாக்கள் (Fake Weddings). இந்த விழாக்கள் உண்மையான திருமண விழாவை போலவே பிரம்மாண்டமாக இருக்கும். இதில் இசை, வண்ணமயமான பாரம்பரிய உடைகள், சங்கீதம் போன்ற நிகழ்ச்சிகள் கூட நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் உண்மையாக இருந்தாலும் கூட, திருமணம் செய்து கொள்ளும் ஜோடி மட்டும் உண்மை கிடையாது.

இந்த திருமண நிகழ்ச்சியில் திருமணம் மட்டும் தான் நடக்காது. மற்ற அனைத்து நிகழ்வுகளும் நடக்கும். இது, முக்கியமாக விருந்தோம்பல் மற்றும் ஆடல் நிகழ்ச்சிகளை ரசிக்க விரும்பும் இளம் தலைமுறைக்கு ஒரு தனித்துவமான பொழுதுபோக்காக மாறி வருகிறது. இந்த போலி திருமண விழாக்கள் தற்போது டெல்லி, பெங்களூரு, புனே போன்ற மெட்ரோ நகரங்களில் பிரபலமாகி வருகின்றன. டெல்லியில் இதுபோன்ற நிகழ்வுக்கு இதனை ஏற்பாடு செய்யும் ஜும்மா கி ராத் என்ற நிறுவனம், நுழைவுக் கட்டணமாக ரூ.500 முதல் ரூ.3,000 வரை வசூலிப்பதாக இன்ஸ்டாகிராமில் முகுல் குரானா என்ற பயனர் பதிவிட்டுள்ளார்.
இவ்வாறான சில நிகழ்ச்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாகவே டிக்கெட் விற்பனை செய்யப்படுகின்றன. சில நிகழ்வுகள் கல்லூரி வளாகங்களில் அல்லது கருத்தரங்கில் திடீரென ஏற்பாடு செய்து நடத்தப்படுகிறது. முக்கியமாக ஜென் Z (Gen Z) என்ற இளம் தலைமுறையினர் இதை அதிகமாக விரும்புகின்றனர். ஏனென்றால், இதில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. உறவினர்கள் இல்லை. கடுமையான மற்றும் பழமையான வழக்கங்கள் இல்லை. இந்த திருமண நிகழ்சியில் இசை, சுவையான உணவு மற்றும் ஒருமைப்பாட்டின் உணர்வு மட்டுமே இருக்கும். இந்த விழாக்களின் மைய நோக்கமே கொண்டாட்டம் தான். அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சி இருப்பதற்கும், சமூக வலைத்தளத்தில் அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிடுவதற்கு மட்டுமே இது பயன்படுகிறது.
இந்த போலி திருமண விழாக்கள் இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்காவில் உள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது. அந்த பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் போலி திருமண விழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்று இன்ஸ்டா பயனர் முகுல் குரானா தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து பயனர் ஒருவர், "இது மற்ற பல டிரெண்ட்களைப் போல சில காலத்துக்கு இருக்கும். பின்னர் மறைந்து போய்விடும்" என்று தெரிவித்துள்ளார். மேலும் ஒருவர், இந்த தலைமுறையினர் எங்கு செல்லப்போகிறார்கள் என்பதைப் பார்க்க மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஒருவர் இன்றைய தலைமுறையினர் வழிமுறைகளை இழந்துவிட்டனர். அவர்களை சரியாக வழிநடத்துவதற்குப் பதிலாக, தவறான பாதையில் நகர்த்தப்படுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications