இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் எல்லாத் துறைகளிலும் கோலோச்ச தொடங்கி விட்டனர். சமையல் செய்வது, குடும்பத்தை கவனிப்பது மட்டுமே பெண்களின் வேலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் பாலின வேற்றுமைகளை உடைத்து இன்று ஆட்டோ ஓட்டுநர், லாரி ஓட்டுநர் எனத் தொடங்கி உலக அளவில் பிரபலமான நிறுவனங்களின் உயர் பதிவிகளில் இருந்துக்கொண்டு வெற்றிகரமாக வழிநடத்தி வருகின்றனர்.
இந்திரா நூயி தொடங்கி ரோஷினி நாடார் வரை இந்தியாவைச் சேர்ந்த பெண்கள் பிரபல நிறுவனங்களுக்கு தலைமைத் தாங்கி அதனை வழிநடத்தி வருகின்றனர். அதன் மூலம் அதிக சம்பளம் வாங்கும் பெண்கள் பட்டியலிலும் அவர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இங்கு இந்தியாவைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களில் பெரிய பதவியில் இருப்பவர்களில் அதிக சம்பளம் வாங்கும் பெண்கள் முதல் அதிக சொத்து மதிப்புள்ள பெண்கள் யார்..?
கிரண் மஜூம்தார் ஷா!
இந்தியாவில் உள்ள பணக்கார பெண் தொழில்முனைவோர்களில் மிகவும் முக்கியமான ஒருவரான கிரண் மஜூம்தார் ஷா (Kiran Mazumdar Shaw), பயோகான் (Biocon) எனும் பயோ பார்மா பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவராகவும் உள்ளார்.
இந்நிறுவனம் 1978 ஆம் ஆண்டு இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தின், ஹார்ட்-ஆஃப் தி சிட்டியான பெங்களூரில் நிறுவப்பட்டது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட சுமார் 120 நாடுகளுக்கும் மருந்துப் பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
Forbes அறிக்கையின்படி இவரது நிகர சொத்து மதிப்பு தோராயமாக 2.1 பில்லியன் டாலர். இவர் 1989 ஆம் ஆண்டு பயோடெக்னாலஜி துறையில் சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக பத்மஸ்ரீ விருதை வென்றார். மேலும் 2005 இல் பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
ஊர்வி ஏ பிரமல்
இவர் அசோக் பிரமல் குழுமத்தின் (Ashok Piramal Group) தலைவராவார். ஊர்வி ஏ பரிமல் (Urvi A Piramal) அவரது கணவர் அசோக் பிராமல் மறைந்த பிறகு, 1984 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கான பொறுப்புகளை ஏற்றார். ஆனால் சில குடும்ப பிரச்சனைகள் காரணமாக 2005 ஆம் ஆண்டு சில சரிவை கண்டார். அதனைத் தொடர்ந்து தொழிலும் நஷ்டமடைய ஆரம்பித்தது.
ஆனால் மனம் தளராமல் ஆறு வருட காலத்திற்குப் பிறகு நிறுவனத்தை லாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றினார். ரியல் எஸ்டேட், ஜவுளி மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுடன் அசோக் பிரமல் குழுமத்தை மீண்டும் நிறுவினார்.
பிசினஸ் வோல்ட் வெளியிட்ட அறிக்கையின்படி 2022 ஆம் ஆண்டு வரை இவரது ஆண்டு ஊதியம் ரூ.10 கோடி பெறுவதாக தெரிவித்துள்ளது.
ரோஷ்னி நாடார் (Roshni Nadar – Chairperson, HCL Tech)
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை அளிக்கும் நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் HCL Technology நிறுவனத்தை வழிநடத்தும் முதல் பெண்மணியாவார். இவர் Kellogg School of Management இல் MBA பட்டம் பெற்றவராவர். எகனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட அறிக்கையின்படி 2022 இல் ரோஷினி நாடார் மல்ஹோத்ரா அவர்களின் நிகர சொத்து மதிப்பு ரூ.54,850 கோடி இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
ஃபால்குனி நாயர் (Falguni Nayyar – Founder, Nykaa)
இந்தியாவின் பிரபலமான பேஷன் மற்றும் காஸ்மெட்டிக் விற்பனை நிறுவனமான நைகா-வின் தலைவர் தான் ஃபால்குனி நாயர். இவர் இந்தியாவின் பணக்கார பெண்களில் ஒருவராவார்.
மேலும் பிசினஸ் இன்சைடர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஃபால்குனி நாயர் வருடத்திற்கு 10.8 கோடி ரூபாய் பெறுவதாக தெரிவித்துள்ளது. இவரது சொத்து மதிப்பு தற்போது 2.7 பில்லியன் டாலர்.
இந்திரா நூயி (Indra Nooyi – Former CEO, PepsiCo)
இந்திரா நூயி சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இவர் மெட்ராஸ் பல்கலைக்கழகம், ஐஐஎம் மற்றும் யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
இவர் பெப்சிக்கோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2018 வரை பதவி வகித்துள்ளார். இவர் 2017 ஆம் ஆண்டு பெப்சிக்கோ நிறுவனத்திடமிருந்து வருடத்திற்கு 31 மில்லியன் டாலர் (ரூ. 238 கோடி) சம்பளமாக பெற்றார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 290 மில்லியன் டாலராக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications