இந்தியா சுதந்திரம் அடைந்த 76 ஆண்டுகளில் பெரிய அளவிலான வளர்ச்சியை அடையாமல் இருந்த அழகுசாதன பொருட்கள் விற்பனை பெரு நகரங்களையும், பணக்கார குடும்பங்களையும் தாண்டி கடந்த 5 வருடத்தில் 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்கள், சிறிய கிராமம் மற்றும் டவுன் பகுதிகள் வரையில் சென்றுள்ளது.
இதற்கு ஆரம்பம், ஆணிவேர் எல்லாம் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் என்றாலும் அழகுசாதன பொருட்களின் விற்பனையின் வேகம் மற்றும் விரிவாக்கம் அடைய மிக முக்கியமான காரணமாக இருந்தது Nykaa நிறுவனம் தான், தற்போது Nykaa-வுக்கு போட்டியாக ரிலையன்ஸ் ரீடைல் TIRA என்ற ரீடைல் வர்த்தக பிராண்டை உருவாக்கியுள்ளது.

Nykaa நிறுவனர் ஃபால்குனி நாயர் இந்தியாவில் உள்ள பணக்கார பெண்களில் ஒருவராகவும், சொந்த முயற்சியில் பில்லியனர் அந்தஸ்து பெற்றவர்களில் முக்கியமானவராக உள்ளார். ஃபால்குனி நாயர் வெற்றிக் கதையில் மிகவும் முக்கியமான பகுதி நிதி மற்றும் முதலீட்டு துறையில் முக்கிய பதவியில் அதிக சம்பளம் தரும் வேலையை விட்டு வெளியேறியது ரிஸ்க் எடுத்து யாரும் செய்திடாத ஒரு முயற்சியை செய்தது தான்.
நைக்கா நிறுவனத்திற்கு முன்பு இந்தியாவில் அழகு சாதன பொருட்களுக்கான ஒரு தனிநிறுவனம், பிராண்ட், ஈகாமர்ஸ் தளம் இருந்தது இல்லை. இதை மைய கருத்தாக வைத்தே ஃபால்குனி நாயர் தனது முதல் பில்லியன் டாலர் மதிப்பிலான நிறுவனத்தை உருவாக்கினார்.
நைக்கா நிறுவனத்தை ஃபால்குனி நாயர் நிறுவிய சில நாட்களில் அவரது குழந்தைகள் அஞ்சித் நாயர் மற்றும் அத்வைதா நாயர் நிறுவனத்தில் சேர்ந்து இப்போது மொத்த நிர்வாகத்தையும் கையில் எடுத்து அசத்தி வருகின்றனர்.
கோடீஸ்வரரான ஃபால்குனி நாயருக்கு அஞ்சித் மற்றும் அத்வைதா என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். அண்ணன்-சகோதரி இருவரும் அவர்களின் தாயை மட்டும் பின்பற்றாமல், முகேஷ் அம்பானி மற்றும் இஷா அம்பானியின் புதிய நிறுவனமான டீரா பியூட்டியுடன் தற்போது வர்த்தகத்தில் போட்டியிட்டு நைக்காவை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஃபால்குனி நாயரின் மகள் அத்வைதா நாயர், பெயின் அண்ட் கம்பெனியில் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு, தனது தாயுடன் சேர்ந்து நைகாவின் இணை நிறுவனரானார். Nykaa இன் ஆஃப்லைன் கடைகளை நிறுவ ஃபால்குனிக்கு அவர் உதவினார், இது நிறுவனத்திற்கு வருவாயில் பெரும் வளர்ச்சியை அளித்தது.
அவரது சகோதரியின் பாதையை பின்பற்றி, அஞ்சித் நாயரும் முதலீட்டு வங்கியாளராக தனது வேலையை விட்டுவிட்டு நைக்காவில் சேர்ந்தார், நிறுவனத்தின் ஈ-ரீடெய்ல் பிரிவைக் கைப்பற்றினார். இந்த இரட்டையர்கள் Nykaa இன் இயக்குநர்கள் குழுவில் உள்ளனர்.
ஃபால்குனி நாயரின் ஒரு காலத்தில் இந்தியாவின் பெரும் பணக்கார பெண் என்று அழைக்கப்பட முக்கிய காரணம் பெரிய அளவில் உதவியது அஞ்சித் மற்றும் அத்வைதா ஆகியோர் தான்.
தற்போது அஞ்சித் நாயர் நைகாவின் ஈ-காமர்ஸ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார், அதே சமயம் அவரது இரட்டை சகோதரி அத்வைதா நாயர் நிறுவனத்தின் ஃபேஷன் பிரிவான நைக்கா ஃபேஷனுக்கு தலைமை தாங்குகிறார்.
ஃபால்குனி நாயர், அஞ்சித் நாயர், அத்வைதா நாயர் ஆகியோர் தலைமையிலான நைகா மூலம் இவர்களது சொத்து மதிப்பு 2.7 பில்லியன் டாலர் அதாவது 22,443 கோடி ரூபாயாக உள்ளது.
நவம்பர் 2022 நிலவரப்படி, Nykaa நிறுவனத்தின் மொத்த மதிப்பு 13 பில்லியன் டாலர் அதாவது 1.08 லட்சம் கோடி ரூபாயாகும். நைகா நிறுவனம் தற்போது ஈஷா அம்பானியின் Tira Beauty, டாடா குழுமத்தின் Tata Cliq மற்றும் Purplele போன்ற பெரிய நிறுவனங்கள் உடன் போட்டிப்போட்டு வருகின்றது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications