ஓரே நாளில் 7 பில்லியன் டாலர் சொத்து.. அசத்தும் ஃபால்குனி நாயர்..! #Nykaa

ஃபால்குனி நாயர் இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மட்டும் அல்லாமல் உலகப் பணக்காரர்கள் பட்டியலிலும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். ஆம், இந்தியாவின் முன்னணி அழகு சாதன பொருட்கள் விற்பனை நிறுவனமான நைகா ஐபிஓ வெளியிட்டு இன்று இந்தியப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் முதல் முறையாகப் பியூட்டி துறை சார்ந்த ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் ஐபிஓ வெளியிடும் இதே வேளையில் ஆன்லைன் அழகு சாதன பொருட்களுக்கான சந்தை பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

இதன் மூலம் நைகா முதல் நாளிலேயே ஐபிஓ விலையை விடவும் சுமார் 96 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

 நைகா பிராண்ட்

நைகா பிராண்ட்

நைகா பிராண்டின் தாய் நிறுவனமானFSN ஈகாமர்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ-விற்குப் பின்பும் இதன் தலைவரான ஃபால்குனி நாயர் இந்நிறுவனத்தில் கிட்டதட்ட 50 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இன்று நைகா பட்டியலிட்ட பின்பு இவரிடம் இருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு 7 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

 ஃபால்குனி நாயர்

ஃபால்குனி நாயர்

இதன் மூலம் சொந்த முயற்சியில் பில்லியனர் ஆன பெருமையை ஃபால்குனி நாயர் பெற்றது மட்டும் அல்லாமல் ஓரே நாளில் இந்தியாவின் பெண் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். சொந்த முயற்சியில் பில்லியனர் ஆன பெண்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் ஃபால்குனி நாயர்.

 722 மில்லியன் டாலர் முதலீடு

722 மில்லியன் டாலர் முதலீடு

ஃபால்குனி நாயர் தலைமையிலான நைகா அன்லைன் வர்த்தகத்தில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது மட்டும் அல்லாமல் இந்தியாவில் மிக முக்கியமான பியூட்டி பிராண்டாகவும் நைகா உருவெடுத்துள்ளது. இந்த ஐபிஓ மூலம் நைகா சுமரா் 722 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை ஈர்த்துள்ளது.

 50 வயதில் பிஸ்னஸ்

50 வயதில் பிஸ்னஸ்

ஃபால்குனி நாயர் இந்த நைகா சாம்ராஜ்ஜியத்தைச் சரியான முறையில் திட்டமிட்டுப் படிப்படியாக வளர்ச்சி பாதைக்குக் கொண்டு சென்றுள்ளார். 2012 வரையில் ஃபால்குனி நாயர் இந்தியாவின் முன்னணி முதலீட்டு வங்கியின் தலைவராக இருந்த நிலையில் 50 வயதிற்கு முன்பு தனது தொழிலதிபராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்றுவதற்காக நைகா-வை துவங்கினார்.

 அழகு சாதன பொருட்கள்

அழகு சாதன பொருட்கள்

இந்திய பெண்களுக்கு அழகுபடுத்திக் கொள்வதில் அதிகம் ஆர்வம் இருந்தாலும் சமுகத்தில் பல தடைகள் இருந்தது. இது மட்டும் அல்லாமல் அழகு சாதன பொருட்கள் கிடைப்பதிலும் பல தடைகள் இருந்தது. முதல் பொருட்கள் கிடைப்பதிலும், அதை எப்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பதை முதல் இந்திய மக்களுக்குக் கொண்டு சேர்க்க விரும்பினார்.

 ஈகாமர்ஸ்

ஈகாமர்ஸ்

இதனால் ஆரம்பம் முதல் மலிவான விலையில் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்வது மட்டும் அல்லாமல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ஈகாமர்ஸ் மூலம் வாடிக்கையாளர்களை அடைந்தது நைகா. இதன் பின்பு ஒவ்வொரு அழகு சாதன பொருட்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதிலும் அதிகக் கவனத்தைச் செலுத்தினார் ஃபால்குனி நாயர்.

 70 நேரடி விற்பனை கடைகள்

70 நேரடி விற்பனை கடைகள்

இப்படிப் படிப்படியாக உயர்ந்த ஃபால்குனி நாயர்-ன் நைகா பிராண்ட் தற்போது பல பாலிவுட் நடிகை மற்றும் பிரபலங்கள் உடன் இணைந்து தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் 70 நேரடி விற்பனை கடைகளை இந்தியா முழுவதும் கொண்டுள்ளது நைகா.

 330 மில்லியன் டாலர் விற்பனை

330 மில்லியன் டாலர் விற்பனை

நைகா இந்தியாவின் மிகப்பெரிய அழகு சாதன பொருட்கள் விற்பனை நிறுவனமாக உருவெடுத்தது. மேலும் மார்ச் முதல் முடிந்த நிதியாண்டில் 35 சதவீத வளர்ச்சி உடன் 330 மில்லியன் டாலர் அளவிலான விற்பனையைப் பதிவு செய்தது. இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் நைகா சற்று வித்தியாசமானது, காரணம் ஐபிஓ வெளியிடும் போது லாபத்தில் உள்ளது.

 ஃபால்குனி நாயர் குடும்பம்

ஃபால்குனி நாயர் குடும்பம்

நைகா நிறுவனத்தில் ஃபால்குனி நாயர் தனது பங்குகளை 2 குடும்ப டிரஸ்ட் மற்றும் 7 ப்ரோமோட்டர் நிறுவனங்கள் மூலம் வைத்துள்ளார். மேலும் ஐவி லீக் கல்லூரியில் பயின்ற தனது மகள் மற்றும் மகன் நைகா நிறுவனத்தை நிர்வாகம் செய்து வருகின்றனர்.

 96.79 சதவீதம் உயர்வு

96.79 சதவீதம் உயர்வு

தற்போது மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் நைகா நிறுவனத்தின் தாய் நிறுவனமான FSN ஈகாமர்ஸ் நிறுவனப் பங்குகள் 96.79 சதவீதம் உயர்ந்து 2,213.85 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் ஃபால்குனி நாயர் கிட்டதட்ட 7 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இருக்கிறார்.

 சாவித்ரி ஜிண்டால்

சாவித்ரி ஜிண்டால்

இந்திய பெண்கள் பணக்காரர்கள் பட்டியலில் ஜின்டால் குரூப் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 12.9 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். மேலும் உலகின் டாப் 500 பில்லியனர்கள் பட்டியலிலும் சாவித்ரி ஜிண்டால் இடம்பெற்றுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+