ஒவ்வொரு மாதமும் உணவு விலையில் ஏற்பட்டிருக்கும் ஏற்றம் மற்றும் குறைவு குறித்து அறிக்கையை CRISIL மதிப்பீட்டு நிறுவனம் தெரிவிக்கும். அதன்படி இந்த நவம்பர் மாதத்தில் சைவ சாப்பாட்டின் விலை அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 2 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறது. அதேபோல அசைவ சாப்பாட்டின் விலை எந்தவித மாற்றமுமின்றி சீராக இருந்து வருகிறது.
சைவ சாப்பாட்டின் விலையில் குறைவு ஏற்பட்டுள்ளதற்கு காரணம் தக்காளி விலை குறைந்ததே. அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. இதனால் தக்காளி விலை 17 சதவீதம் வரை குறைந்துள்ளது.

சமையல் எண்ணெயின் விலை 4 சதவீதமும், வெங்காயத்தின் விலை 4 சதவீதமும் மற்றும் உருளைக்கிழங்கின் விலை 1 சதவீதமும் அதிகரித்து சைவ சாப்பாட்டின் விலை சரிவை தடுத்து நிறுத்தியது. அசைவ சாப்பாட்டில் பிராய்லர் கோழியின் விலை 2 சதவீதம் அதிகரித்ததன் காரணமாக எந்தவித மாற்றமுமின்றி அப்படியே இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு சைவ சாப்பாட்டில் ரொட்டி, வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, அரிசி, பருப்பு, தயிர், சாலட் ஆகியவை இருக்கும். அதே நேரம் அசைவ சாப்பாட்டில் பருப்புக்கு பதிலாக கோழி மற்றும் இதர காய்கறிகள் இருக்கும். இந்த அறிக்கை இந்தியாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளின் விலைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் வீட்டில் சமைக்கப்படும் சைவ சாப்பாட்டின் விலை 7.2 சதவீதமும், அசைவ சாப்பாட்டின் விலை 1.8 சதவீதமும் விலையில் உயர்வு ஏற்பட்டிருக்கும். இந்த அதிகரிப்பு தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் விலை உயர்வு காரணமாக ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக சைவ சாப்பாட்டில் தக்காளி மற்றும் வெங்காயத்தின் பங்கு 26 சதவீதம் இருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரோடு ஒப்பிடுகையில் தக்காளி விலை 35 சதவீதம் அதிகரித்துள்ளது. பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் குறைந்த விளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. அதோடு உருளைக்கிழங்கின் விலையும் 50 சதவீதம் அதிகரித்திருக்கிறது. அதே நேரத்தில் பருப்பு விலை 10%, சமையல் எண்ணெயின் விலை 13%, எரிபொருளின் விலை 11 சதவீதமும் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசைவ சாப்பாட்டில் பிராய்லர் கோழியின் விலை 3 சதவீதம் சரிந்துள்ளது. அசைவ சாப்பாட்டை பொருத்த வரையில் கோழியின் பங்கு 50 சதவீதம் இருக்கிறது. காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளின் விலைகள் டிசம்பர் முதல் நிலையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், புதிய பொருட்கள் சந்தைக்கு வந்து கொண்டிருப்பதால் சைவ சாப்பாட்டின் விலை மேலும் குறையும் என்றும் கிரிஸில் சந்தை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு இயக்குனரான புஷன் சர்மா கூறியுள்ளார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications