எலக்ட்ரிக் கார், ஸ்கூட்டர் வாங்கபோறீங்களா? வெயிட் பண்ணுங்க.. சுடசுட தயாராகும் சூப்பர் திட்டம்..!!

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், ஜூலை மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில், எலக்ட்ரிக் வாகன விற்பனை ஊக்க திட்டத்தின் மூன்றாம் பதிப்பை (FAME III) மத்திய அரசு வெளியிடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆகிய அனைத்து வகையான எலக்ட்ரிக் வாகனங்களுக்கும் FAME திட்டத்தின் கீழ் நிதி ஆதரவு வழங்கப்படும். FAME III திட்டத்திற்காக சுமார் ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

எலக்ட்ரிக் கார், ஸ்கூட்டர் வாங்கபோறீங்களா? வெயிட் பண்ணுங்க.. சுடசுட தயாராகும் சூப்பர் திட்டம்..!!


FAME III திட்டத்தை நிர்வாகம் செய்யும் மத்திய கனரக தொழில்துறை அமைச்சகம், திட்டத்திற்கான திட்ட வரைவை பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பிவைத்துள்ளது. இந்த திட்டத்தை மத்திய நிதியமைச்சகம் ஆய்வு செய்து இந்த பட்ஜெட் திட்டத்தில் அறிவிக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்யும் நாள் நெருங்கும்போது, நிதி நிலைமையைக் கருத்தில் கொண்டு இத்திட்டத்திற்கான இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் புதிய எலக்ட்ரிக் கார் வாங்குவோர் பட்ஜெட் அறிவிப்பு வரையில் காத்திருப்பது உத்தமம்.

FAME திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் மானியத்தை ஏற்கனவே பெரிய அளவில் மத்திய அரசு குறைத்த நிலையில் மொத்தமாக நிறுத்தும் அச்சத்துடன் இருந்த வேளையில் EV துறைக்கு EMPS திட்டம் மூலம் தற்காலிக நிவாரணம் கடந்த நிதியாண்டின் இறுதியில் கிடைத்தது. சரி எதற்காக இந்த FAME திட்டம் வந்தது தெரியுமா..?

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி குறுகிய காலத்திலேயே பெரிய அளவில் வளர்ந்தாலும், அதன் விலை அதிகமாக இருப்பதாலும், உற்பத்தி நிறுவனங்கள் வெளிநாட்டிலிருந்து தொழில்நுட்பம், பேட்டரி போன்றவற்றைப் பெற வேண்டிய கட்டாயம் இருந்த காரணத்தால், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனையை ஊக்குவிக்க அதன் உற்பத்தி விலையில் அரசு மானியம் வழங்கியது.

இந்த மானியத்திற்காகவே பலர் ஆர்வமாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கினர். FAME, FAME 2 என இரு திட்டத்தில் மத்திய அரசு மானியம் அளித்த நிலையில் FAME 3 திட்டத்தை அறிவிக்காமல் மத்திய அரசு மானியம் வழங்குவதில் மாற்றத்தைக் கொண்டு வரும் நோக்குடன் தற்காலிகமாக EMPS திட்டத்தின் கீழ் மானியத்தை சில மாதங்களுக்கு மட்டுமே அளிக்கப்பட்டது.

FAME திட்டத்தின் முக்கியத்துவம்: இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முக்கிய திட்டமாக FAME திட்டம் கருதப்படுகிறது. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம், எரிபொருள் இறக்குமதியைக் குறைத்து, காற்று மாசுபாட்டைக் குறைக்க இத்திட்டம் உதவி வருகிறது.

FAME III திட்டத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம்?: FAME III திட்டத்தின் இறுதி வடிவம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், எலக்ட்ரிக் வாகனங்களின் விலையைக் குறைப்பதற்கான மானியங்கள், எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான சலுகைகள் மற்றும் எலக்ட்ரிக் வாகன உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனச் சந்தையை வலுப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குப் பங்களிப்பு அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+