வங்கி கணக்கில் 8000 ரூபாய் வருவதற்கு பதிலாக தவறுதலாக 82 கோடி ரூபாய் வந்ததையடுத்து வங்கி கணக்கின் உரிமையாளர் இன்ப அதிர்ச்சி அடைந்து ஆடம்பரமாக அந்த பணத்தை செலவு செய்துள்ளார்.
சொந்த வீடு வாங்கியும் சகோதரிகளுக்கு வீடு வாங்கி கொடுத்தும் ஆடம்பரமாக செலவு செய்த நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அந்த திருப்பம் என்ன? அவருக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? அதை அவர் எப்படி சமாளித்தார் என்பதை தற்போது பார்ப்போம்.
ரூ.8000க்கு பதில் ரூ.82 கோடி
ரூ. 8 ஆயிரத்திற்குப் பதிலாக ரூ. 82 கோடியை தவறுதலாகத் வங்கி கணக்கில் பெற்ற ஒருவர் தற்போது அவர் பெற்ற பணத்தை வட்டியுடன் திரும்ப செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆடம்பர வாழ்க்கை
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த கிரிப்டோகரன்ஸி வர்த்தகர் தேவமனோகரி மணிவேல் என்பவர்Crypto.com மூலம் ரூ.8000க்கு பதிலாக ரூ.82 கோடியை பெற்றார். இந்த பணத்தை அவர் தனது சகோதரி கணக்கிற்கு பெருமளவு மாற்றி ஆடம்பரமாக செலவு செய்துள்ளார். சொந்த மாளிகை, சகோதரிகளுக்கு வீடு என அந்த பணத்தை அவர் தண்ணீராக செலவு செய்தார்.
தணிக்கையில் கண்டுபிடிப்பு
இந்த நிலையில் சிங்கப்பூரை தலைமையிடமாக கொண்ட வர்த்தக நிறுவனமான Crypto.com இந்த தவறை ஏறக்குறைய ஏழு மாதங்களுக்குப் பிறகு தணிக்கையின் போது கண்டுபிடித்தது.
பெரும் சிக்கல்
இதனையடுத்து வர்த்தக நிறுவனம் மணிவேல் மற்றும் அவரது சகோதரியிடம் தவறுதலாக பெற்ற பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பியது. அதனால் மணிவேல் குடும்பம் தற்போது பெரும் சிக்கலில் மாட்டியுள்ளது.
வங்கிக்கணக்கு முடக்கம்
Crypto.com எடுத்த சட்ட நடவடிக்கைகள் காரணமாக மணிவேல் மற்றும் அவரது சகோதரியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த வழக்கில் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 26 அன்று Crypto.com நிறுவனத்திற்கு ஆதரவாக தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின்படி மணிவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் தவறுதலாக பெற்ற முழு பணம் மற்றும் அதற்கான வட்டியை சேர்த்து நிறுவனத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications