உலக அளவில் பொருளாதார மந்தநிலை, பணவீக்கம் அனைவரையும் ஆட்டிப்படைக்கிறது. மக்கள் விலை உயர்வையும், அன்றாட வாழ்க்கையையும் சமாளிக்கவே ஒரு வேளைக்கு இரு வேலை பார்த்து வருகின்றனர்.
இதெல்லாம் போதாதென்று இயற்கை சீற்றங்களும் மக்களின் வாழ்க்கையை இன்னும் மோசமாக்கி வருகின்றன. இதெல்லாம் ஒரு புறம் இருக்க, கையில் ஒரு மொபைல் ஃபோனை வைத்துக் கொண்டு இன்றுள்ள இளைஞர்கள் வெளியிடும் வீடியோக்களை பார்க்க பார்க்க அதிர்ச்சியை தான் அளிக்கிறது.
கார் ஆடம்பரம் என கூறும் பலருக்கு மத்தியில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான காரை வெடிக்கவைத்து அதன் மூலம் மார்கெட்டி செய்துள்ளார் ரஷ்யா-வை சேர்ந்த ஒரு யூடியூபர் Mikhail Litvin.
யூடியூப் அலப்பறைகள்!
சமூக ஊடகங்களில் மூழ்க்கிப்போகும் அளவிற்கு யூடியூப்பில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன. பலர் வருமானம் ஈட்டும் நோக்கத்தில் வரை முறையில்லாமல் விடியோக்களை வெளியிட்டு, பிரபலமும் ஆகி விடுகின்றனர்.
பிரபல ரஷ்ய யூடியூபர்!
ரஷ்யாவின் வித்தியாசமான விடியோக்களை பதிவிட்டு 10 மில்லியன் ஃபாலோயர்களை வைத்திருக்கும் Mikhail Litvin எனும் யூடியூபர் ஒரு விளம்பரத்திற்காக 3.15 கோடி மதிப்புள்ள லம்போர்கனியை காரை சுக்குநூறாக உடைத்துள்ளார்.
புது மார்க்கெட்டிங் யுக்தி!
யூடியூபர் மிகைல் லிட்வின் அவரின் சொந்த தயாரிப்பான Mr Litvin's எனர்ஜி drink பிராண்டின் விளம்பரத்திற்காக சுமார் 3.15 கோடி மதிப்புள்ள வெள்ளைநிற அதிக நவீன சொகுசு காரான லம்போர்கனி URUS மீது ஒரு டேங்க் நிறைய அந்த Mr Litvin's எனர்ஜி drink-ஐ நிரப்பி காரின் மீது போடப்பட்டு சுக்குநூறாக உடைக்கப்பட்ட விடியோவை அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பப்ளிசிட்டி
பலரும் பப்ளிசிட்டிக்காகவும், மார்க்கெட்டிங்காகவும் நல்ல விளம்பரங்களை தயாரித்த காலங்கள் போய், யூடியூப்பில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் நபர்களிடம் தங்கள் தயாரிப்புகளை மார்க்கெட் செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.
எதிர்ப்பு!
மிகைல் லிட்வின் (Mikhail Litvin) இந்த இன்ஸ்டாகிராம் பதிவு மக்களிடையே பல எதிர்ப்புக்களை பெற்றுள்ளது. இப்படி பணத்தின் அருமை தெரியாமல் செய்வது சரியில்லை என்றும், பணத்தை இப்படிப்பட்ட காரியங்களுக்குச் செலவு செய்யாமல் ஏதேனும் நல்ல விஷயங்களுக்காகவோ, பாதிக்கப்பட்ட மக்களுக்கு Donation ஆக கொடுத்திருக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.
யூடியூப் பிரபலங்கள் அட்ராசிட்டி!
யூடியூப்பில் ஒரு நபர் 1 மில்லியன் ஃபாலோயர்களை பெற்று விட்டாலே அவர் பிரபலமானவர்தான். அதிலும் அவர்கள் கொடுக்கும் அல்லது வெளியிடும் கதைகள் எவ்வளவும் மொக்கையாக இருந்தாலும் அதை ரசிக்கவும், கொண்டாடவும் ஒரு மக்கள் கூட்டம் உள்ளதை உலகம் முழுவதும் பார்க்க முடிகிறது. தமிழ்நாட்டிலேயே இதற்கு பல உதாரணங்கள் சொல்ல முடியும்.
வர்த்தகம்
அப்படி 1 மில்லியன் ஃபாலோயர்களை அவர்கள் யூடியூப்பில் பெற்றுவிட்டால், சிறிய ஸ்டார்ட்-அப் முதல், பெரிய நிறுவனங்களும் மார்க்கெட்டிங்காக அவர்களை அணுகி அவர்களுடைய தயாரிப்பை மக்கள் வாங்குமாறு பரிந்துரைக்க சொல்கின்றனர்.
பாதிப்பு
அந்த தயாரிப்புகள் / பொருட்கள் அல்லது முதலீடுகள் நம்பகத்தன்மை குறித்து நாம் உற்று கவனித்தால், உண்மையான முடிவுகள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கும் என்பதுதான் உண்மை.
அதில் சமீபத்தில் இந்தி நடிகர் அர்ஷத் வர்சி யூடியூப் விளம்பரத்தை நம்பி மக்கள் பலரும், அவர்கள் பெரிதும் அறியாத நிறுவனத்தில் முதலீடு செய்து பல லட்சங்களை இழந்துள்ளனர்.
யூடியூப் மோசடிகள்!
அதில் சமீபத்தில் இந்தி நடிகர் அர்ஷத் வர்சி யூடியூப் விளம்பரத்தை நம்பி மக்கள் பலரும், அவர்கள் பெரிதும் அறியாத நிறுவனத்தில் முதலீடு செய்து பல லட்சங்களை இழ்ந்துள்ளனர்.
அதிலும் பிரபல ரஷ்ய யூடியூபர் ஒருவர் செய்த காரியம்தான் இன்று வைரலாகி மக்களிடையே பல எதிர்ப்புக்களை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications