இந்தியாவின் ஒட்டுமொத்த வர்த்தக ஏற்றுமதி கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில், கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 15.5% குறைந்துள்ளது. எனினும் அதே காலகட்டத்தில் விவசாய பொருட்கள் ஏற்றுமதியானது 9.8% வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
கொரோனா காலத்தில் அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காரணத்தால், இந்தியாவில் அத்தியாவசியம் தவிர அனைத்து உற்பத்தி துறைகளும் முடங்கின. இதன் காரணத்தால் விலையும் அதிகரித்தது. ஏற்றுமதியும் பாதித்தது.
ஆனால் மறுபுறம் லாக்டவுனால் விவசாய உற்பத்தியானது பாதிக்கப்படவில்லை. இதனால் இதன் ஏற்றுமதியும் அதிகரித்தது. அதிக தேவை காரணமாக விலையும் அதிகரித்தது.
விவசாய பொருட்கள் ஏற்றுமதி
இது குறித்தான வர்த்தக அமைச்சகத்தில் தரவின் படி, அனைத்து பொருட்களின் ஏற்றுமதியும் ஏப்ரல் - டிசம்பர் 2020 காலகட்டத்தில் 201.30 பில்லியன் டாலர்களாக குறைந்ததாக காட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் விவசாய பொருட்கள் ஏற்றுமதியானது 26.34 பில்லியன் டாலரில் இருந்து 28.91 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
விவசாய பொருட்கள் இறக்குமதி
இதே காலகட்டத்தில் விவசாய துறை சார்ந்த பொருட்கள் இறக்குமதியானது 5.5 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணம விவசாய துறையில் உபரி 9.57 பில்லியன் டாலரில் இருந்து, 13.07 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதேமற்ற பொருட்கள் ஏற்றுமதியானது சரிந்துள்ளது.
என்னென பொருட்கள் அதிகம்
குறிப்பாக பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதி 110.12% அதிகரித்துள்ளது. காட்டன் (Row cotton) ஏற்றுமதி கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஏப்ரல் - டிசம்பர் காலகட்டத்த்ல் 95.06 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கோதுமையின் ஏற்றுமதியானது 428.02 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே மற்ற தானியங்களின் ஏற்றுமதியானது 174.05 சதவீதம் ஏற்றுமதி கண்டுள்ளது.
எந்த நாட்டிற்கு அதிக ஏற்றுமதி?
இந்த ஏற்றுமதி விகிதமானது குறிப்பாக ஐரோக்கிய ஐக்கிய நாடுகளுக்கு அதிகரித்துள்ளது. அதோடு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான விலையும் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் அதிகளவு தேவை இருந்த காரணத்தினால் ஏற்றுமதி அதிகரித்துள்ளதோடு, விலையும் கூடியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications