ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து அதன் பிறகு தனது வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கி தற்போது ஏக்கருக்கு ரூ. 32 லட்சம் வரை வருமானம் ஈட்டி வருகிறார் ஒரு நபர். அவர் அப்படி என்ன செய்கிறார்? எப்படி இவ்வளவு வருமானம் பெறுகிறார் என்ற விவரங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
கோலாப்பூரைச் சேர்ந்த பிரவீன் போர்கேவ் பச்சை, சிவப்பு மற்றும் மஞ்சள் கேப்ஸிகம் ஆகியவற்றை பயிரிட்டு வருகிறார். ஏக்கருக்கு தற்போது 40 டன் வரை அறுவடை செய்கிறார். ஆண்டு முழுவதும் வருமானம் பெறுவதற்காக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தனது பண்ணையில் ஒரு பகுதியில் மரக்கன்றுகளை நடுகிறார். மறுபகுதியில் கேப்ஸிகம் விவசாயம் செய்து வருகிறார். தற்போது 1 கிலோவுக்கு 80 ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது.

2012-ஆம் ஆண்டில் வேளாண்மையில் இளங்கலை பட்டம் பெற்ற பிறகு பிரவீன் போர்கேவ் ஒரு விவசாய நிறுவனத்தில் பணிபுரிய தொடங்கினார். அடுத்த 8 ஆண்டுகளில் விவசாயத்தின் அடிப்படையை தெரிந்து கொண்டு எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்ற விவரங்களையும் தெரிந்து கொண்டார். மகாராஷ்டிராவின் கோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கணேஷ்வாடி கிராமத்தில் உள்ள ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் பிரவீன்.
வயல்களில் வேலை செய்வது பிரவீனுக்கு பிடித்த ஒன்று. 2020-ஆம் ஆண்டில் தான் ஒரு முயற்சியை கையில் எடுக்க பிரவீன் முடிவு செய்தார். தனது 4 ஏக்கர் விவசாய நிலத்தில் ஒரு ஏக்கரில் பாலி ஹவுஸ் அமைக்க தொடங்கினார். அதற்காக ஆரம்ப முதலீடாக ரூ.10 லட்சம் பெற்றார். அதில் ரூ. 5 லட்சம் மானியம் கிடைத்தது. தனது பணியை தொடங்கிய போது கோவிட் 19 பரவ தொடங்கியது. எனவே பணிக்கு திரும்புவது சாத்தியமில்லை என்பதை தெரிந்து கொண்டு 0.25 ஏக்கருக்கு மேல் மற்றொரு பாலி ஹவுஸ் கட்டி ஆண்டு முழுவதும் தேவை இருக்கும் கேப்ஸிகம் பயிரை நட முடிவு செய்தார்.
கோவிட்-19 பரவ தொடங்கிய போது ஒரு மரக்கன்று ரூ.11 என்ற விலையில் சுமார் 6000 மரக்கன்றுகளை வாங்கியுள்ளார். இவை ஏப்ரல் மாதத்தில் நடப்பட்டன. அதிலிருந்து ஜூன் மாத இறுதிக்குள் குடைமிளகாய்கள்.. சுமார் 85 முதல் 90 நாட்களில் அறுவடைக்கு தயாரானது. அதற்குள் ஊரடங்கில் சில தளர்வுகளும் போடப்பட்டன. மேலும் ஹோட்டல்கள் மற்றும் வீட்டில் இருப்பவர்களுக்கும் வெளிநாட்டு காய்கறிகளுக்கான தேவை அதிகரித்தது.
அந்த நேரத்தில் அரை ஏக்கருக்கு மேல் உள்ள 6,000 செடிகளின் மூலம் முதல் மாதத்தில் 6 டன் அறுவடையையும், 2-வது மாதத்தில் 5 டன் அறுவடையையும் செய்தார். அதன் பின்னர் 2021-ஆம் ஆண்டில் அனைத்து செடிகளும் மொத்தமாக 30 டன் விளைச்சலை தந்துள்ளது. அப்போது கேப்சிகம்-இன் சந்தை விலை ரூ.80 முதல் 180 ரூபாய் வரை இருக்கும். அரை ஏக்கரில் இருந்து இதன் மூலம் ரூ.33 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது.
அனைத்து விவசாயிகளுக்கும் இருக்கும் சிரமமான விஷயம் என்னவென்றால்.. தாங்கள் அறுவடை செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவது தான். எனவே பிரவீன் பெருநகரங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். ஹோட்டல்களில் சப்ளையர்களாக இருந்த விற்பனையாளர்களுக்கு சப்ளை செய்ய தொடங்கியுள்ளார். முதல் வருடத்தில் காண்டாக்ட்களை ஏற்படுத்தினார். தொடர்ந்து அவர்களுக்கு சப்ளை செய்து வருகிறார்.
புதிய விற்பனையாளர்களையும் சந்தித்து ஒவ்வொரு வருடமும் புதிய நபர்களையும் தனது சப்ளையர்களாக மாற்றி வருகிறார். அதோடு தனது பாலிஹவுசை இன்னும் இரண்டு ஏக்கருக்கு விரிவுபடுத்தி வருகிறார். இப்போது 4 ஏக்கருக்கும் அதிகமாக கேப்ஸிகம் பயிரிடுகிறார். பிரவீன் மற்றொரு இரண்டு ஏக்கர் நிலத்தையும் வைத்திருக்கிறார். அங்கு செர்ரி, தக்காளி, மிளகாய் போன்ற காய்களையும் வளர்த்து வருகிறார்.
முதலீடு: பிரவீன் பாலிஹவுஸ் அமைக்கவும், மரக்கன்றுகள், மாட்டு சாண உரம் மற்றும் லேபர் காஸ்ட் போன்ற அனைத்திற்கும் 40 லட்சம் வரை செலவானது என்று கூறியுள்ளார். அதோடு அரசாங்கம் இதில் 50 சதவீதம் மானியம் வழங்கியது. இதனால் விவசாயி பிரவீன் ரூ.20 லட்சம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டி இருந்தது. ஒரு ஏக்கரில் தற்போது 12,000 கேப்சிகம் செடிகள் உள்ளன. ஒவ்வொரு செடியும் 4 கிலோ வரை கேப்ஸிகம் தருகிறது. நல்ல விவசாய நடைமுறைகள் இருந்தால் ஒரு விவசாயி தினமும் 200 கிலோ முதல் 300 கிலோ கேப்ஸிகம் அறுவடை செய்யலாம் என கூறுகிறார் இந்த சாதனை விவசாயி.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications